'இந்த நிமிஷம் வரைக்கும் என்னை ஏமாத்திக்கிட்டு இருக்க: பரத், வாணிபோஜனின்  'லவ்' டிரைலர்..!

  • IndiaGlitz, [Friday,July 14 2023]

பரத் மற்றும் வாணி போஜன் முக்கிய வேடங்களில் நடித்த ‘லவ்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

காதலிக்கும் போதே சில முரண்பாடுகளுடன் காதலித்த பரத், வாணி போஜன் திருமணம் செய்து கொண்ட பின்னர் இருவரும் இடையே அடிக்கடி சண்டை வருகிறது. இந்த சண்டையில் ஒரு முறை எதிர்பாராத வகையில் வாணி போஜனை பரத் கொன்றுவிட அதன் பிறகு அந்த கொலையில் இருந்து பரத் நண்பர்களின் உதவியுடன் தப்பினாரா? என்பதை விறுவிறுப்பான திரைக்கதையுடன் எடுக்கப்பட்ட படம் தான் ‘லவ்’ என்பது இந்த படத்தின் ட்ரைலரில் இருந்து தெரிய வருகிறது.

பரத், வாணி போஜன், விவேக் பிரசன்னா, ராதாரவி, டேனியல் போப் உள்பட பலர் நடிப்பில் உருவாகிய இந்த படத்தை ஆர்பி பாலா இயக்கியுள்ளார். ரோன்னி ராஃபெல் இசையில், பிஜி முத்தையா ஒளிப்பதிவில், அஜய் மனோஜ் படத்தொகுப்பில் உருவாக்கிய இந்த படம் ஜூலை 28ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் பாரத் மற்றும் வாணி போஜன் ஆகிய இருவருக்கும் வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

சரத்குமாருக்கு ராதிகா கொடுத்த அன்பு முத்தம்.. என்ன விசேஷம்

நடிகர் சரத்குமார் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு நடிகை ராதிகா தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து அன்பு முத்தம் கொடுத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படம்

தந்தையுடன் இணைந்து பிளாக் பெல்ட் வாங்கிய தமிழ் நடிகை.. குவியும் வாழ்த்துக்கள்..!

தமிழ் நடிகை கராத்தேயில் பிளாக் பெல்ட் வாங்கி உள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

டாஸ்மாக்கில் மது வாங்கும் இளம்பெண்கள்.. நடிகை கஸ்தூரியின் கமெண்ட்டுக்கு குவியும் கண்டனங்கள்..!

டாஸ்மாக் மதுக்கடையில் இரண்டு இளம் பெண்கள் மது வாங்கும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட நடிகை கஸ்தூரிக்கு நெட்டிசன்களின் கண்டனங்கள் குவிந்து வரும் நிலையில் அவர் அதற்கு விளக்கம்

Leo Lokesh கூட Compare பண்ணாதிங்க

பிரபல தயாரிப்பாளர் K ராஜன் அவர்கள் தமிழ் சினிமாவின் தற்போதைய போக்கு பற்றியும் இயக்குனர்கள் செய்யும் தவறுகள் பற்றியும் நமக்கு அளித்த நேர்காணலில் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

திருமணத்தால் சுதந்திரம் பறிபோகும்? திருமணம் ஆகாத 39 வயது நடிகை பகீர் கருத்து

20 வருடங்களுக்கு மேலாக தமிழ், தெலுங்கு சினிமாவில் நடித்துவரும் முக்கிய நடிகை ஒருவர் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும்