'லியோ' ரிலீசுக்கு 6 நாட்களுக்கு முன் ரிலீசாகும் பரத்-ரகுமான் திரைப்படம்.. போஸ்டர் வைரல்..!

  • IndiaGlitz, [Sunday,October 08 2023]

தளபதி விஜய் நடித்த ’லியோ’ திரைப்படம் வரும் 19ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அதற்கு 6 நாட்களுக்கு முன்னர் பரத் மற்றும் ரகுமான் இணைந்து நடித்த படத்தின் ரிலீஸ் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

பரத் மற்றும் ரகுமான் ஆகிய இருவரும் இணைந்து நடித்த திரைப்படம் ’சமாரா’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பே ரிலீசுக்கு தயாராக இருந்த நிலையில் இந்த படம் அக்டோபர் 13ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 19ஆம் தேதி ’லியோ’ வெளியாகும் நிலையில் 6 நாட்களுக்கு முன்புதான் இந்த படம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பரத், ரகுமான், சஞ்சனா திபு, வினோத், ராகுல் மாதவ், கோவிந்த கிருஷ்ணா உள்பட பலர் நடிப்பில் உருவான இந்த படத்தை சார்லஸ் ஜோசப் என்பவர் இயக்கி உள்ளார். இந்த படத்தின் டிரைலர் கடந்த ஜூலை மாதம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தின் ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் இந்த போஸ்டர் வைரலாகி வருகிறது.

More News

கோலிவுட் திரையுலகில் இதுதான் முதல் முறை.. 'தலைவர் 171' படம் குறித்து சூப்பர் அப்டேட்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் 171வது திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார் என்பதும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கும்

அந்த நபரை சும்மா  விடக்கூடாது.. பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்த ரம்யா கிருஷ்ணன்..!

நடிகையும் ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜாவை சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அந்த நபரை சும்மா விடக்கூடாது என நடிகை ரம்யா கிருஷ்ணன் ஆவேசமாக பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

வார்னிங் ஸ்ட்ரைக் கொடுத்த கமல்ஹாசன்.. பிக்பாஸ் போட்டியாளர் அதிர்ச்சி..!

உலகநாயகன் கமல்ஹாசன் பிக்பாஸ் போட்டியாளர் ஒருவருக்கு வார்னிங் ஸ்ட்ரைக் கொடுத்தார் என்பதும் மூன்று முறை ஸ்ட்ரைக் பெற்றால் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் என்று எச்சரித்தார்

அருவியில் ஆனந்தக் குளியல்... செம்ம வீடியோவை வெளியிட்ட நடிகை அமலாபால்..!

நடிகை அமலா பால் தனது சமூக வலைத்தளத்தில் அருவியில் ஆனந்தமாக குளிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்துள்ளது.

ரோலக்ஸ் தம்பி கேரக்டர்.. ஆடிஷனுக்கு அழைக்கப்பட்ட பிரபல நடிகரின் மகன்.. அதன் பின் ஏற்பட்ட அதிர்ச்சி..!

https://tamil.asianetnews.com/gallery/cinema/famous-actor-son-cheated-by-using-the-name-of-leo-movie-director-lokesh-kanagaraj-gan-s25ljs#image4