இந்தியாவின் காஸ்ட்லி பிச்சைக்காரர்? இவருடைய சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
மும்பை பகுதிகளில் தினமும் பிச்சை எடுத்து வாழ்ந்துவரும் ஒரு நபர் உலகிலேயே மிகப்பெரிய பிச்சைக்காரர் என அறியப்பட்டு இருப்பதோடு அவருடைய வாழ்க்கை முறையைப் பார்த்து பலரும் அதிர்ச்சியை அடைந்திருக்கும் தகவல் வெளியாகி இருக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரப் பகுதிகளில் தினமும் 10 – 12 மணிநேரம் வரை கடுமையாக பிச்சை எடுத்து வாழ்ந்து வருபவர் பரத் ஜெயின். இதை அவர் தன்னுடைய வாழ்வாதாரத்திற்கு என்றில்லாம் பிச்சை எடுப்பதை ஒரு தொழிலாகவே பல வருடங்களாக செய்து வருகிறார். இந்நிலையில் அவருடைய சொத்துமதிப்பு கிட்டத்தட்ட ரூ.7.5 கோடி என மதிப்பிடப்பட்டு இருக்கிறது.
பரத் ஜெயின் மும்பையை ஒட்டி இருக்கும் சத்ரபதி சிவாஜி மகராஜ் டெர்மினஸ் மற்றும் ஆசாத் மைதானம் ஆகிய பகுதிகளில் பிச்சை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. வெறுமனே சாப்பாட்டிற்கு மட்டுமே பிச்சை எடுக்கும் மற்ற பிச்சைக்காரர்களைப் போல இல்லாமல் இவர் தினமும் 12 மணி நேரம் வரை தன்னுடைய தொழிலை செய்துவருகிறார். அந்த வகையில் ஒரு நாளைக்கு 2,000 முதல் 2,500 ரூபாய் வருமானத்தையும் ஈட்டி வருகிறார்.
இதனால் பரத் ஜெயின் ஒரு மாதத்திற்கு குறைந்தது 60,000 முதல் 75,000 வரை வருமானத்தை பெறுவார் எனக் கூறப்படுகிறது. இந்த வருமானத்தைக் கொண்டு பரத் ஜெயின் மும்பை பகுதியில் 1.5 கோடி மதிப்புள்ள 2 படுக்கை அறை கொண்ட குடியிருப்பு வீட்டை சொந்தமாக வாங்கியுள்ளார். மேலும் பரோல் பகுதியில் 1 படுக்கை அறை கொண்ட ஒரு வீடு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் தானே பகுதியில் 2 கடைகளை சொந்தமாக வைத்திருக்கும் பரத் ஜெயினுக்கு அதன் மூலம் மாதம் 30,000 வாடகை வருவதாகவும் கூறப்படுகிறது. ஒட்டுமொத்தமாக 7.5 கோடி மதிப்புள்ள சொத்துக்களை வைத்திருக்கும் பரத் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகள் மற்றும் ஒரு சகோதரர், தந்தையுடன் தற்போது வசித்து வருகிறார்.
இதையடுத்து பரோல் பகுதியிலுள்ள வீட்டில் வசதியாக வாழ்ந்துவரும் இவருடைய குழந்தைகள் இருவருமே கான்வெட்டில் படித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இப்படி ஏதோ பிச்சைக்காரர்கள் என்றால் அழுக்கு வேட்டியுடன் குளிக்காத உடலை வைத்துக் கொண்டிருப்பார்கள் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் பிம்பத்திற்கு முற்றிலும் மாறாக தற்போது பிச்சை எடுத்தே கோடீஸ்வரர் ஆகியிருக்கும் தகவல் வைரலாகப் பேசப்பட்டு வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments