கோவேக்சின் விலையை குறைத்த பாரத் நிறுவனம்....! நல்ல செய்திப்பா...!
- IndiaGlitz, [Friday,April 30 2021]
கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை குறைத்ததை தொடர்ந்து, கோவேக்சின் தடுப்பூசியின் விலையையும் நிறுவனம் குறைத்துள்ளது.
கோவிஷீல்டு தடுப்பூசியை சீரம் நிறுவனமும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் இணைந்து தயாரித்தது. இதேபோல் இந்திய மருத்துவ கவுன்சிலும், பாரத் பயோடெக் நிறுவனமும் இணைந்து கோவேக்சின் தடுப்பூசியை தயாரித்தன. இந்தியாவில் தாயரிக்கப்பட்ட இந்த இரண்டு தடுப்பூசிகளும் தான் தற்போது நம் நாட்டில் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில் மாநில அரசுகளுக்கு ரூ.600 எனவும், தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.1200 என்றும் கோவேக்சின் தடுப்பூசி விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதைத் தொடர்ந்து விலைமாற்றம் காரணமாக மாநில அரசுகள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தன. மாநில அரசு சார்பாக கோவேக்சின் விலையை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனால் பாரத் நிறுவனம் ரூ.200 விலையை குறைத்து, ரூ.400 ஆக கோவேக்சினை விற்பனை செய்ய முடிவுசெய்துள்ளது. இதனால் 33% தடுப்பூசி விலை குறைந்துள்ளது எனலாம். ஆனால் தனியார் மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்யப்படும் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்றும் கூறியுள்ளது.
இதேபோல் சீரம் நிறுவனம் 22% கோவிஷீல்டு விலையை குறைத்துள்ளது. இந்த தடுப்பூசியின் விலை ரூ.400 லிருந்து, ரூ.100 குறைக்கப்பட்டு, தற்போது ரூ.300-க்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.