மத்திய அரசுக்கு எதிராக 25 கோடி பேர் பங்கேற்றுள்ள பாரத் பந்த்..! மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.

  • IndiaGlitz, [Wednesday,January 08 2020]

தொழிலாளர்களின் நலன்களுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவதாக தொழிலாளர் நல அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஊதிய உயர்வு, வேலைவாய்ப்பின்மைக்கு தீர்வு, பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதை தடுத்தல், வங்கிகளின் கட்டாய இணைப்பை நிறுத்துதல், சர்ச்சைக்குரிய சட்டங்களை நீக்குதல் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை மத்திய அரசிடம் முன்வைத்தன.

இதுதொடர்பாக மத்திய தொழிலாளர் நலத்துறை இணையமைச்சர் சந்தோஷ் கங்வாரை சந்தித்து தொழிற்சங்க பிரதிநிதிகள் கடந்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் எந்தவித உடன்பாடும் எட்டப்படாததால் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தன.

இதில் சிஐடியூ, ஐ.என்.டி.யூ.சி உள்ளிட்ட 10 மத்திய வர்த்தக தொழிற்சங்கங்களும், பல்வேறு தொழிற்சங்க கூட்டமைப்புகளும் பங்கேற்றுள்ளன. இந்த போராட்டத்தில் அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த சுமார் 25 கோடி பேர் பங்கேற்றுள்ளனர்.

இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் வர்த்தகத்தில் பல கோடி ரூபாய் மதிப்பில் இழப்பீடு ஏற்படும் என்று கூறப்படுகிறது. எனவே தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்குமா என்று எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

இன்று நடைபெறும் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக நாட்டின் எந்தப் பகுதியிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை. அதேசமயம் ஒடிசா மாநிலம் உத்கல் பல்கலைக்கழகத்தின் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. ஐ.சி.ஏ.ஆர், நெட் ஆகிய தேர்வுகளும் தள்ளி வைக்கப்பட்டு உள்ளன.
 

More News

ஈரான் ஏவுகணை தாக்குதலுக்கு all is well சொன்ன டிரம்ப்...!

ஈரான் ஏவுகணை தாக்குதலுக்கு all is well என ட்வீட் செய்துள்ள டிரம்ப்.

சென்னை திரும்பிய ரஜினிகாந்த் அளித்த ஒருநிமிட பேட்டி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவான 'தர்பார் திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

சுலைமானி உடல் அடக்கம்..அமெரிக்க ராணுவ தளத்தை நோக்கி பறந்த ஈரான் ஏவுகணைகள்..!

ஈராக் இராணுவ தளபதியான சுலைமானியின் இறப்புக்கு காரணமான அமெரிக்க இராணுவ தளத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.

தலைவர் பேனருக்கு ஹெலிகாப்டரிலிருந்து மலர் தூவணும்.. சேலத்திலிருந்து ரஜினி ரசிகர்.

தர்பார் படத்தின் முதல் நாள் கொண்டாட்டத்தில் ஹெலிகாப்டர் உதவியின் மூலம் ரஜினியின் கட்டவுட்டிற்கு பூ தூவ திட்டமிட்டிருக்கிறார் சேலத்தை சேர்ந்த கனகராஜ். 

முதல்முறையாக யோகிபாபுவின் வித்தியாசமான முயற்சி!

தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராகிய யோகிபாபு தற்போது கிட்டத்தட்ட அனைத்து முக்கிய நடிகர்களின் படங்களிலும் காமெடி வேடங்களில் நடித்து வருகிறார்