நாளை நாடு தழுவிய போராட்டம்… தமிழகத்தில் பஸ், ரயில்கள் இயக்கப்படுமா???
Send us your feedback to audioarticles@vaarta.com
மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டத்திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி நாடு முழுவதும் விவசாயிகள் கடும் போராட்டத்தில் குதித்து உள்ளனர். இதை தவிர்க்கும் வகையில் மத்திய அரசு கடந்த 10 நாட்களாக விவசாயிகளுடன் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் விவசாயிகளுடன் 5 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு எட்டப்படவில்லை. இதனால் மீண்டும் நாளை மற்றும் நாளை மறுநாளும் பேச்சுவார்த்தக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லை என்று விவசாயிகள் அமைப்புகள் தெரிவித்து, நாளை நாடு தழுவிய முழு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. இந்தப் போராட்டத்தை ஆதரிப்பதாக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், சமாஜ்வாடி, சிவசேனா, ஆம் ஆத்மி, திமுக, இந்திய கம்யூனிஸ்டு மார்க்சிஸ்ட்டு உள்பட 18 கட்சிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளன.
இந்நிலையில் தமிழக எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் கலந்து கொள்ள உள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக தமிழக அரசு அனைத்துவித முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளையும் செய்துள்ளது. பொது வேலைத் நிறுத்தத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில் அனைத்து அரசு பஸ்களும் இயக்கப்பட உள்ளது என்று போக்குவரத்து உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.
மேலும் தமிழகத்தில் பல்வேறு நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் மாநகர மற்றும் நகர பஸ்கள் அனைத்தும் வழக்கம்போல் நாளை இயக்கும் எனவும் கூறப்படுகிறது. இதனால் தமிழகத்தில் 8 போக்குவரத்து கழங்கள் சார்பாக 22 ஆயிரம் அரசு பஸ்கள் வழக்கமாக இயக்கப்பட உள்ளது. தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் முழுமையாக திறக்கப்படாததால் சேவை குறைக்கப்பட்டு உள்ளது.
ஆனால் பகல் நேரத்தில் மிக குறைந்த அளவில் தான் பஸ்கள் இயக்கப்படும் என ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் தெரிவித்து உள்ளார். மாலை 6 மணிக்கு பிறகு எல்லா பகுதிகளுக்கும் ஆம்னி பஸ் சேவை தொடரும் எனவும் கூறப்பட்டு உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout