முதல் வாரயிறுதியில் 10 ஆயிரம் காட்சிகள்: சூப்பர் ஸ்டார் படத்தின் சூப்பர் பிளான்
Send us your feedback to audioarticles@vaarta.com
தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடித்த 'பாரத் அனே நேனு' என்ற திரைப்படம் வரும் 20ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தை மிக அதிகமாக திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர் தீவிர முயற்சியில் உள்ளனர்.
இந்த நிலையில் இந்த படத்தை அமெரிக்காவில் பிரிமியர் மற்றும் முதல் வாரயிறுதி நாட்களில் 10 ஆயிரம் காட்சிகள் திரையிட இந்த படத்தின் அமெரிக்க உரிமையை பெற்றுள்ள நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ரிலீசுக்கு முந்தைய நாளான ஏப்ரல் 19ஆம் தேதி 320 இடங்களில் சுமார் 2000 பிரிமியர் காட்சிகளும், வாரயிறுதி நாட்களில் மொத்தம் 10 ஆயிரம் காட்சிகளும் திரையிட அனைத்து ஏற்பாடுகளும் செய்யபப்ட்டிருப்பதாக கிரேட் இந்தியா பிலிம்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனம் தான் இந்த படத்தின் அமெரிக்க ரிலீஸ் உரிமையை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மகேஷ்பாபு, கைரா அத்வானி, பிரகாஷ்ராஜ், சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்தை கொரட்டலா சிவா இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout