பாக்யராஜின் 'சின்னவீடு 2' படத்தின் ஹீரோ யார்?

  • IndiaGlitz, [Friday,January 18 2019]

கடந்த சில ஆண்டுகளாக சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்கள் உருவாகி வருவது கோலிவுட்டில் டிரெண்டாகி வருகிறது. அந்த வகையில் கே.பாக்யராஜ் நடித்து இயக்கிய 'சின்னவீடு' படத்தின் இரண்டாம் பாகமும் விரைவில் தயாராகவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

கடந்த 1985ஆம் ஆண்டு கே.பாக்யராஜ், ஊர்வசி, அனு நடிப்பில் பாக்யராஜ் இயக்கத்தில் இளையராஜா இசையில் உருவாகிய 'சின்னவீடு' திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. குண்டான மனைவியால் அதிருப்தி அடையும் கணவன் சபலத்தால் இன்னொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதும், இதனால் ஏற்படும் விளைவுகளும்தான் இந்த படத்தின் கதை.

இந்த நிலையில் 33 வருடங்கள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சியில் பாக்யராஜ் உள்ளார். 'சின்னவீடு 2' படத்திற்கான திரைக்கதையை பாக்யராஜ் தயார் செய்துவிட்டதாகவும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தில் பாக்யராஜின் மகன் சாந்தனு ஹீரோவாகவும், பாக்யராஜ் முக்கிய கேரக்டரிலும் நடிப்பாரக்ள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2010ஆம் ஆண்டு சாந்தனு நடித்த 'சித்து +2' படத்திற்கு பின் பாக்யராஜ் இயக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

விஜய் ஆண்டனியின் 'தமிழரசன்' படத்தில் அறிமுகமாகும் பிரபல இயக்குனரின் மகன்

விஜய் ஆண்டனி நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் டைட்டில் 'தமிழரசன்' என்ற செய்தி நேற்று வெளியானது. பாபு யோகேஸ்வரன் இயக்கும் இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கவுள்ளார்.

மீண்டும் இணையும் ரஜினி-கமல்

ஒருபக்கம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படம் கடந்த 10ஆம் தேதி வெளியாகி ரூ.100 கோடி வசூல் செய்து மிகப்பெரிய வெற்றிப்படமாகியுள்ளது.

விஜய்சேதுபதியின் மெகா பட்ஜெட் படம் குறித்த தகவல்

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் 'மாமனிதன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி அருண்குமார் இயக்கத்தில் அவர் நடிக்கவுள்ள படத்திற்கு 'சிந்துபாத்

தளபதி விஜய் பார்த்து பாரட்டிய சூப்பர் ஹிட் திரைப்படம்

கடந்த கிறிஸ்துமஸ் தினத்தில் ஐந்து முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியான நிலையிலும் டப்பிங் படமான 'கேஜிஎப்' வெளியாகி கடும் போட்டியிலும் நல்ல வசூலை குவித்தது

சினிமா தான் முதல்வர் ஆவதற்கான முதல் தகுதியா? பிசி ஸ்ரீராம்

அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, மக்கள் திலகம் எம்ஜிஆர், புரட்சி தலைவி ஜெயலலிதா என தமிழகம் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாத்துறையை சேர்ந்த ஒருவரையே முதல்வராக தேர்வு செய்துள்ளது.