இதை மட்டும் கொஞ்சம் கேட்டு சொல்லுங்க: மாஸ்டர் நடிகருக்கு ரசிகரின் கோரிக்கை
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்திய திரையுலகின் சிறந்த திரைக்கதை ஆசிரியர் என்று போற்றப்படும் கே பாக்யராஜ் அவர்களுடைய திரைப்படம் குறித்து ஒரு சந்தேகத்தைக் கேட்டு உள்ள ரசிகர் ஒருவர், அந்த சந்தேகத்தை அவரிடம் கேட்டு சொல்லுமாறு அவருடைய மகனும் ‘மாஸ்டர்’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள்வருமான சாந்தனுவிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
அந்த ரசிகர் இதுகுறித்த வீடியோவில் கூறியபோது ’கே.பாக்யராஜ் அவர்களின் தீவிர ரசிகர்களில் ஒருவர் தான் நான் என்றும் கடந்த இரண்டு மூன்று மாதங்களில் அவர் இயக்கிய அனைத்து படத்தையும் பார்த்தாகவும் கூறினார். மேலும் பாக்யராஜ் நடித்து இயக்கிய ‘வீட்ல விசேஷங்க’ என்ற படத்தில் ஒரு காட்சியில், கதாநாயகன்-கதாநாயகி சேரும் காட்சியில் ஒரு பாடல் வரும். அந்த பாடலில் அனைவருமே கதாநாயகனும் கதாநாயகியும் தான் வருவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் திடீரென வேறொரு நடிகரை வந்திருப்பார் பாக்யராஜ். அந்த பாட்டு முடிந்தவுடன் அந்த பாடலில் இருந்து பிளாஷ்பாக் ஆரம்பமாகும்.
இப்படி ஒரு காட்சியை நான் தமிழ் சினிமாவில் இதுவரை பார்த்ததே இல்லை. இதுவரை எந்த திரைப்படத்திலும் இப்படி ஒரு காட்சி அமைக்கவில்லை. எந்த இயக்குனரும் இதுபோல் யோசித்ததில்லை. இந்த நிலையில் இந்த காட்சி அவருடைய மனதுக்கு எப்படி தோன்றியது என்பதை தெரிந்து கொள்ள நான் ஆசைப்படுகிறேன். எனவே சாந்தனு அவர்களே உங்கள் தந்தையிடம் இது குறித்து கேட்டு ஒரு வீடியோவை பதிவு செய்யுங்கள் என்று அந்த ரசிகர் கூறியுள்ளார்.
அந்த ரசிகரின் கோரிக்கையை சாந்தனு ஏற்றுள்ளதாகவும் மிக விரைவில் பாக்யராஜ் அவர்களிடம் இருந்து இது குறித்த வீடியோ வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
@imKBRshanthnu Please Sir idhuku oru reply video poadunga... Ungaluku time irukaadhu thaan, free time la konjam naeram odhukunga please... Romba naal aasai Sir... pic.twitter.com/NbFMj5EWQH
— Umesh Khanna2 (@UmeshKhanna2) May 13, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com