நீங்க திட்டறது எல்லாம் எனக்கு அவார்டு மாதிரி: பிரபல சீரியல் நடிகர்
Send us your feedback to audioarticles@vaarta.com
நீங்கள் எனது நடிப்பை பார்த்து எவ்வளவு திட்டினாலும் அது எனக்கு அவார்டு கொடுப்பது மாதிரி என பிரபல சீரியல் நடிகர் ஒருவர் வீடியோ ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் நாயகி பாக்கியலட்சுமி கணவராக கோபிநாத் என்பவர் நடித்து வருகிறார். இவர் அழகான மனைவி இருக்கும் போது முன்னாள் காதலியோடு தொடர்பு இருக்கும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை அடுத்து ரசிகர்கள் அவரை திட்டி தீர்த்து வருகின்றனர். நல்ல அழகான மனைவி இருக்கும்போது இப்படி ஒரு தொடர்பு தேவையா? இவரைப் பார்த்தாலே எரிச்சலாக வருகிறது என்று கமென்ட் அடித்து வருகின்றனர்
தன்னுடைய கேரக்டருக்கு கொடுக்கப்பட்டுள்ள கமெண்டுகளை பார்த்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள கோபிநாத், ‘நான் என்ன செய்வது? என்னுடைய முதலாளி எனக்கு சம்பளம் கொடுக்கிறார். அதற்காக நான் நடித்து வருகிறேன். ஆனால் ஒன்று, ஹீரோவாக நடிப்பதில் எந்த ஒரு சுவராஸ்யம் இல்லை. வில்லன் கேரக்டரில் நடிப்பது தான் கெத்து. ரஜினி, ரகுவரன், பிரகாஷ்ராஜ் மாதிரி வில்லன் கேரக்டரில் நடித்தால் தான் ஒரு சுவாரஸ்யம் இருக்கும் என்று கூறியுள்ளார்
மேலும் இது ஒரு கதை, நீங்கள் அதான் என்னை எவ்வளவு திட்டினாலும் அதை எனக்கு கொடுக்கும் விருதாக நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
Bhagya lakshmi #gopi pic.twitter.com/OmooKJKuhy
— chettyrajubhai (@chettyrajubhai) April 13, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com