அந்த மனுஷனுக்கு கல்யாணமாகி குழந்தை இருக்குது: திருமண வதந்தி குறித்து 'பாக்கியலட்சுமி' நடிகை..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் நடித்து வரும் விகாஸ் சம்பத் மற்றும் திவ்யா ஆகிய இருவரும் காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்ய போவதாகவும் கூறப்பட்ட நிலையில், இது குறித்து திவ்யா மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளார்.
சீரியலில் கணவன் மனைவியாக நடித்தால், நிஜத்திலும் கணவன் மனைவி ஆகிவிடுவார்கள் என்று நினைக்கும் வெகுளித்தனம் நிறைய பேரிடம் உள்ளது. முதலில் ஒரு YouTube சேனலில் இது குறித்த செய்தி வந்த போது, நான் அதை கண்டுகொள்ளவில்லை. ஆனால் பல முன்னணி YouTube சேனல் மற்றும் இணையதளங்களும் இந்த செய்தியை விசாரிக்காமல் அப்படியே வெளியிடுவது தான் என் மனதுக்கு கஷ்டமாக இருந்தது.
அந்த மனுஷனுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி, குழந்தை கூட இருக்கு. இந்த வதந்தியால் எங்கள் ரெண்டு பேர் வீட்டுலையும் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படுகின்றன. சமூக வலைதளங்களில் இருப்பவர்களுக்கு ஒன்றே ஒன்றை மட்டும் சொல்லி கொள்ள விரும்புகிறேன். செலிபிரிட்டிகள் பற்றிய இந்த மாதிரி தகவல் கேள்விப்பட்டீர்களானால், தயவு செய்து செக் பண்ணாமல் ஷேர் செய்ய வேண்டாம்.
ஏற்கனவே என் திருமணம் நின்றதற்கு ஆளாளுக்கு கதை அளந்து விட்டார்கள். இப்ப ஏற்கனவே திருமணம் ஆன ஒருத்தரை கல்யாணம் பண்ண போறேன்னு சொல்றாங்க என்று ஆதங்கப்பட்டார். இதையடுத்து ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் நடித்து வரும் விகாஸ் சம்பத் மற்றும் திவ்யா திருமணம் என்ற செய்தி முழுக்க முழுக்க வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments