பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் வீட்டில் சூனியம் வைத்த பெண்? அதிர்ச்சி காரணம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் வீட்டிற்கு பெண் ஒருவர் சூனியம் வைத்ததாக கூறப்படும் நிலையில் அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விஜய் டிவியில் கடந்த சில ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் டிஆர்பியில் நல்ல ரேட்டிங் பெற்று வருகிறது என்பதும் இந்த சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில் இந்த சீரியலில் சதீஷ்குமார் என்பவர் நாயகன் கோபி என்ற கேரக்டரில் நடித்து வரும் நிலையில் அவருடைய திருவான்மியூர் வீட்டில் திடீரென எலுமிச்சம்பழம் வைத்து சூனியம் வைத்து விடுவேன் என ஒரு பெண் மிரட்டுவதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு அறுபடை முருகன் கோயிலுக்கு சதீஷ்குமார் சென்றபோது அவருடன் செல்பி புகைப்படம் எடுத்துக் கொள்ள பெண் ஒருவர் கோரிக்கை விடுத்ததாகவும் ஆனால் சதீஷ்குமார் மறுத்துவிட்டதை அடுத்து ஆத்திரமடைந்த அந்த பெண்தான் நடிகர் சதீஷ்குமார் வீட்டில் சூனியம் வைத்து மிரட்டல் விடுத்துள்ளதாகவும் சதீஷ்குமார் தரப்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் சதீஷ்குமார் செல்போன் எண்ணுக்கு அந்த பெண்மணி தொடர்ந்து போன் செய்து வருவதாகவும் ஒரு கட்டத்தில் அவருடைய எண்ணை பிளாக் செய்தும் அவரை பின் தொடர்ந்து வருவதாகவும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் வீட்டு வாசலில் குங்குமம் தடவிய எலுமிச்சம்பழத்தை வைத்து சூனியம் வைத்து விடுவேன் என மிரட்டியதாக சதீஷ்குமார் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com