பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் 'பாக்கியலட்சுமி' சீரியல் நடிகையா? வேறு யாரெல்லாம் போட்டியாளர்கள்?

  • IndiaGlitz, [Monday,September 09 2024]

விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருக்கிறார் என்ற அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் அடுத்த கட்டமாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும் சில போட்டியாளர்கள் உறுதி செய்யப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.

குறிப்பாக ’பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகர் அருண், டிடிஎஃப் வாசன் மற்றும் அவரது காதலி ஜோயா கலந்து கொள்ள இருப்பதாக கூறப்பட்டது. மேலும் நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன், குக் வித் கோமாளி நடுவர் மாதம்பட்டி ரங்கராஜ் ஆகியோர்களும் போட்டியாளர்களாக இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது விஜய் டிவியில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் ’பாக்கியலட்சுமி’ சீரியலில் அமிர்தா என்ற கேரக்டரில் நடித்து வரும் அக்ஷிதா போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் நடிக்கும் ரேஷ்மா பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில் தற்போது அதே சீரியலில் நடிக்கும் அக்‌ஷிதாவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சிம்புவின் 'எஸ்டிஆர் 48' படத்தில் பிக்பாஸ் போட்டியாளர்.. அவரே அளித்த தகவல்..!

சிம்பு நடிக்க இருக்கும் 'எஸ்டிஆர் 48' படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தில் பிக்பாஸ் போட்டியாளர் நடிக்க இருப்பது உறுதி செய்துள்ளதை

'கோட்' திரைப்படத்தில் கேப்டனுக்கு வாய்ஸ் கொடுத்தவர் இந்த பிரபல நடிகரா?

தளபதி விஜய் நடித்த 'கோட்' திரைப்படத்தில் கேப்டன் விஜயகாந்த் ஒரு சில காட்சிகளில் தோன்றும் நிலையில் அவருக்கு பின்னணி குரல் கொடுத்தது தமிழ் திரை உலகின் பிரபல ஹீரோ

'ராட்சசன்' பட தயாரிப்பாளர் திடீர் மறைவு.. அதிர்ச்சியில் கோலிவுட் திரையுலகம்..!

விஷ்ணு விஷால் நடித்த 'ராட்சசன்' உட்பட சில வெற்றி படங்களை தயாரித்த தயாரிப்பாளர் டில்லி பாபு திடீரென காலமானதை அடுத்து கோலிவுட் திரை உலகம் அதிர்ச்சியில் உள்ளது.

'கோட்' ஓடிடி ரன்னிங் டைம் இத்தனை மணி நேரமா? விஜய் ரசிகர்களுக்கு செம்ம விருந்து..!

தளபதி விஜய் நடித்த 'கோட்' திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் ரன்னிங் டைம் சுமார் 3 மணி நேரம் என்று இருந்ததை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில்

எந்த நடிகையும் தைரியமாக புகார் கூறலாம்: நடிகர் சங்க கூட்டத்தில் ரோகிணி..!

நடிகைகளுக்கு பாலியல் தொல்லை ஏற்பட்டால் யாராக இருந்தாலும் தைரியமாக நடிகர் சங்கத்தில் புகார் அளிக்கலாம் என்றும் அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்