'கார்த்திகை தீபம்' சீரியலில் திடீர் என்ட்ரி ஆகும் 'பாக்கியலட்சுமி' நடிகை.. கதையில் திருப்பம் ஏற்படுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் ’கார்த்திகை தீபம்’ என்ற தொடர் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த தொடரில் ’பாக்கியலட்சுமி’ சீரியலில் நடித்த நடிகை என்ட்ரி ஆக இருப்பதாக கூறப்படுவது கதையில் விருப்பத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கார்த்திக் ராஜ் மற்றும் அர்த்திகா முக்கிய வேடத்தில் நடிக்கும் ’கார்த்திகை தீபம்’ என்ற சீரியல் ஜீ தமிழ் சேனலில் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக ஒளிபரப்பாகி வருகிறது என்பதும் 350 எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பாகி உள்ள நிலையில் தற்போது கதை விறுவிறுப்பான கட்டத்திற்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்த சீரியலில் தற்போது நடிகை ஜெனிஃபர் என்ட்ரி ஆக இருப்பதாகவும் அவர் ரம்யா என்ற கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் தெரிகிறது. இந்த தகவலை ஜெனிஃபர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். இவர் ஏற்கனவே ’பாக்கியலட்சுமி’ சீரியலில் ராதிகா என்ற கேரக்டரில் நடித்த நிலையில் அதன் பிறகு திருமணம் ஆனதும் அந்த சீரியலில் இருந்து விலகி விட்டார். தற்போது திருமணமாகி குழந்தை பிறந்த பின்னர் மீண்டும் சின்னத்திரையில் ரிஎண்ட்ரியாக இருக்கும் நிலையில் அவர் ’கார்த்திகை தீபம்’ சீரியலில் நடிக்கவுள்ளார்.
இது குறித்து அவர் கூறிய போது ’கார்த்திகை தீபம்’ சீரியலில் நான் ஒரு கேரக்டரில் நடிக்க போகிறேன், ராதிகா கேரக்டருக்கு எப்படி எனக்கு ஆதரவு தந்தீர்களோ, அதேபோல் கார்த்திகை தீபம் சீரியலில் ரம்யா கேரக்டருக்கும் உங்களுடைய அன்பும் ஆதரவும் தேவை, இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த ஜீ தமிழ் சேனலுக்கு நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளார். ’பாக்கியலட்சுமி’ தொடரில் ராதிகாவாக நடிப்பில் அசத்திய ஜெனிஃபர் மீண்டும் ரீ என்ட்ரி ஆகயிருப்பதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments