பாக்கியலட்சுமி தொடரில் இருந்து திடீரென விலகும் கோபி.. காணாமல் போன இன்ஸ்டா பக்கம்..!

  • IndiaGlitz, [Monday,September 30 2024]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த சதீஷ், அந்த தொடரில் இருந்து விலக இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, திடீரென தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள அனைத்து பதிவுகளையும் ப்ரைவைட் ஆக்கியுள்ளார். இதனால் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கம் காணாமல் போயுள்ளது என்பதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாக்கியலட்சுமி சீரியல் 2020 ஆம் ஆண்டில் முதல் ஒளிபரப்பாகி, 1200 எபிசோடுகளை தாண்டி தொடர்ந்து வெளியாகி வருகிறது. இந்த சீரியலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் கோபி என்ற கதாபாத்திரத்தில் சதீஷ், பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தில் சுசித்ரா ஷெட்டி, ஜெனிபர் கதாபாத்திரத்தில் ரேஷ்மா ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த சீரியல் விரைவில் முடிவடைய உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலைய்ல் சதீஷ் திடீரென பாக்கியலட்சுமி சீரியலில் விட்டு விலகப் போவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். ’ஒரு பொய்யை முத்தமிடுவதை விட, உண்மையிடம் அறை வாங்கிக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தனது அனைத்து இன்ஸ்டாகிராம் பதிவுகளையும் பிரைவைட் ஆக்கியுள்ளதால் இன்ஸ்டாகிராம் பக்கமே காணாமல் போயுள்ளதால், என்ன நடந்தது என்பது பற்றி தெளிவாக எதுவும் தெரியவில்லை. இருந்தாலும், சதீஷ் இந்த தொடரிலிருந்து விலகுவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதால், கோபி கதாபாத்திரத்தில் இனி யார் நடிப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

'சோறு தான் எல்லாமே'.. குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் பிரியங்காவின் பதிவு..!

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் பிரியங்கா தனது சமூக வலைதளத்தில் "சோறு தான் எல்லாமே" என பதிவிட்டுள்ளார்.

விஜய்யை அடுத்து சூர்யா.. லிவிங்ஸ்டன் மகள் நடிக்கும் சீரியல் டைட்டில் அறிவிப்பு..!

பிரபல நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் நடிக்கும் புதிய சீரியலின் தலைப்பு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

'லப்பர் பந்து' அன்பு, கெத்து கேரக்டர்களில் நடிக்க இருந்தவர்கள் இவர்களா? மிஸ் ஆன வாய்ப்பு..!

ஹரிஸ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் நடித்த 'லப்பர் பந்து' என்ற திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த படத்தில்  அன்பு கேரக்டரில் ஹரிஷ் கல்யாண்,

இன்று முதல் ட்ரிம் செய்யப்பட்டது 'மெய்யழகன்'.. எத்தனை நிமிடங்கள் தெரியுமா?

கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி நடித்த 'மெய்யழகன்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்தின் ரன்னிங் டைம் இன்று முதல் 18 நிமிடங்கள் குறைக்கப்பட்டதாக

'விடுதலை' இன்னொரு வெர்ஷனில் சசிகுமார்.. கிளிம்ப்ஸ் வீடியோ..!

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான "விடுதலை" திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், இதே டைட்டில் ஆனால் ஆங்கிலத்தில் 'Freedon' என்ற பெயரில்