விமர்சனங்களை தாண்டி, 20 வயதில் சாதிக்கும் சீரியல் நடிகை....!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் "காற்றுக்கென்ன வேலி" சீரியலின் நாயகிதான் நடிகர் பிரியங்கா குமார். சீரியலில் துணிச்சலான கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவருக்கு, சமூகவலைத்தளங்களில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
பிரியங்கா சின்னத்திரைக்கு வந்தது எப்படி...?
தன்னுடைய சிறிய வயதில் இருந்தே சினிமா மீது பிரியங்காவிற்கு ஆர்வமாம். இதனால் பள்ளியில் படிக்கும் போதே, அதாவது தன் 15-ஆம் வயதில் மாடலிங் செய்ய துவங்கியுள்ளார். இதன் மூலம் ஏராளமான ஷூட்களிலும், விளம்பரங்களிலும் நடித்து வந்துள்ளார். 'மேக்ஸ் எலைட் மாடல் லுக் இந்தியா’ என்ற போட்டியில் சென்ற 2016-இல் கலந்து கொண்டதன் மூலம், பிரியங்காவிற்கு சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
பிபிஏ பட்ட படிப்பை மைசூரில் நிறைவு செய்த பிரியங்கா, இதையடுத்து முழுமையாக நடிப்பில் கவனம் செலுத்த துவங்கினார். முதன் முதலாக கன்னட சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைக்க, அதை லாவகமாக பயன்படுத்திக் கொண்ட இவருக்கு மேலும் சில சீரியல்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதன்பின் சன் டிவியில் வெளியான "சாக்லேட்" என்ற சீரியலில் "டஸ்கி நாயகியாக" நடிக்க வாய்ப்பு கிடைக்க, அந்த கதாபாத்திரத்திலும் சிறப்பாக நடித்திருந்தார்.
தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "காற்றுக்கென்ன வேலி" சீரியலில், துறுதுறுவென வெண்ணிலா கதாபாத்திரம் மூலம் ரசிகர்களை கொள்ளை கொண்டுள்ளார். இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் பிரியங்காவிற்கு, எதிர்மறையான விமர்சனங்களும் தொடர்ந்து வந்து கொண்டே தான் இருக்கிறது. இதற்கெல்லாம் பதிலளிக்காமல் பேட்டிகள் மூலம், தன்னுடைய தைரியமான கருத்துக்களை முன்னெடுத்து வைக்கிறார் பிரியங்கா.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout