ரேஷன் கார்டை பயன்படுத்தாமல் விட்டால் ரத்து செய்யப்படுமா??? எச்சரிக்கை அறிவிப்பு!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனாவுக்கு இடையில் மத்திய அரசு நாடு முழுவதும் ஒரே ரேஷன் திட்டத்தை அமல்படுத்தியது. இதன்படி இந்தியாவில் உள்ள அனைத்து குடிமக்களும் இந்தியாவிற்குள் எந்த இடத்தில் வேண்டுமானாலும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். இந்நிலையில் புதிய ரேஷன் கார்டு பற்றிய எச்சரிக்கை அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டு இருக்கிறது.
இந்தியாவில் பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவினருக்கான ஒன் நேஷன் ஒன் ரேஷன் கார்டு அதாவது ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டம் அமல்படுத்தப் பட்டுள்ளது. அதன்படி தற்போது ஒரு நபர் 3 மாதங்கள் வரை ரேஷன் பொருட்களை வாங்காவிட்டால் அவர்கள் அரசாங்க உதவியின்றி தங்களைத் தற்காத்துக் கொள்ளும் திறன் கொண்டவர்கள் என்று கருதப்படுவார்கள் எனக் கூறப்பட்டு உள்ளது.
இதன் பொருள் என்னவென்றால் ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவரும் 3 மாத காலத்திற்குள் ஒரு முறையாவது ரேஷனில் பொருட்களை வாங்க வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் ரேஷன் கார்டு காலாவாதியானதாகக் கருதப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைத்து இந்தியக் குடிமக்களும் தங்களது பொருட்களை முறையாக பெற்று கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout