கொரோனாவால் வரும் புதிய ஆபத்து… எச்சரிக்கையாக இருங்க மக்களே!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா பாதிப்பு வந்தாலோ அல்லது அறிகுறிகள் இருந்தோலோ அந்த நபருக்கு வாசனை அறியும் திறன் இருக்காது. அதோடு சாப்பாட்டின் சுவையும் தெரியாது. இந்த அறிகுறிகளைப் பற்றிய விஷயம் நம் எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால் மல்லிப்பூ போல மணக்கும் உணவு கூட அப்படியே எதிர்மறையாக (சாக்கடையாக) தெரியும் மற்றொரு அறிகுறியைப் பற்றி விஞ்ஞானிகள் தற்போது தகவல் வெளியிட்டு உள்ளனர். ஆனால் இதுபோன்ற அறிகுறிகள் அரிதானது எனவும் விளக்கம் அளித்து உள்ளனர்.
அதாவது உணவின் சுவை மற்றும் வாசனை தெரியாமல் இருப்பது சாதாரண காய்ச்சல் மற்றும் சளி தொல்லைகளின்போது கூட ஏற்படும். ஆனால் நறுமணம் உள்ள ஒரு பூ அப்படியே எதிர்மறையாக கூவத்தைப் போல நாறும் விசித்திரம் கொரோனாவின் புதிய அறிகுறியாக இருக்கிறது. பொதுவாக வாசனை மற்றும் சுவை தெரியாமல் இருப்பதை அநாஸ்மியா என மருத்துவர்கள் அழைப்பர். ஆனால் சுவைக்குப் பதிலாக நாற்றம் அடிக்கும் அறிகுறியை பரோஸ்மியா என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.
கொரோனா பாதிப்பு ஏற்பட்ட சிலருக்கு அவர்கள் எப்போதும் உண்ணும் உணவு கூட நாற்றம் அடிப்பதாகக் குற்றம் சாட்டி உள்ளனர். இதுகுறித்து ஆய்வு மேற்கொண்ட விஞ்ஞானிகள் இது கொரோனாவின் புதிய அறிகுறியாக இருக்கலாம். இப்படி ஏற்படுவது மிக அரிதாக இருந்தாலும் இந்தப் பாதிப்பு ஏற்பட்டவர்கள் உணவை சாப்பிட முடியாமல் தவிக்க வேண்டிய நிலைமை ஏற்படலாம் எனவும் எச்சரித்து உள்ளனர். மேலும் இந்த அறிகுறிகளைக் கொண்டவர்களுக்கு உணவை பார்த்தாலே அருவருப்பாகத் தோன்றலாம். வாந்தி வருவது போல குமட்டிக் கொண்டும் வரலாம் எனவும் கூறியுள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com