கொரோனாவால் வரும் புதிய ஆபத்து… எச்சரிக்கையாக இருங்க மக்களே!!!

  • IndiaGlitz, [Monday,December 21 2020]

 

கொரோனா பாதிப்பு வந்தாலோ அல்லது அறிகுறிகள் இருந்தோலோ அந்த நபருக்கு வாசனை அறியும் திறன் இருக்காது. அதோடு சாப்பாட்டின் சுவையும் தெரியாது. இந்த அறிகுறிகளைப் பற்றிய விஷயம் நம் எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால் மல்லிப்பூ போல மணக்கும் உணவு கூட அப்படியே எதிர்மறையாக (சாக்கடையாக) தெரியும் மற்றொரு அறிகுறியைப் பற்றி விஞ்ஞானிகள் தற்போது தகவல் வெளியிட்டு உள்ளனர். ஆனால் இதுபோன்ற அறிகுறிகள் அரிதானது எனவும் விளக்கம் அளித்து உள்ளனர்.

அதாவது உணவின் சுவை மற்றும் வாசனை தெரியாமல் இருப்பது சாதாரண காய்ச்சல் மற்றும் சளி தொல்லைகளின்போது கூட ஏற்படும். ஆனால் நறுமணம் உள்ள ஒரு பூ அப்படியே எதிர்மறையாக கூவத்தைப் போல நாறும் விசித்திரம் கொரோனாவின் புதிய அறிகுறியாக இருக்கிறது. பொதுவாக வாசனை மற்றும் சுவை தெரியாமல் இருப்பதை அநாஸ்மியா என மருத்துவர்கள் அழைப்பர். ஆனால் சுவைக்குப் பதிலாக நாற்றம் அடிக்கும் அறிகுறியை பரோஸ்மியா என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

கொரோனா பாதிப்பு ஏற்பட்ட சிலருக்கு அவர்கள் எப்போதும் உண்ணும் உணவு கூட நாற்றம் அடிப்பதாகக் குற்றம் சாட்டி உள்ளனர். இதுகுறித்து ஆய்வு மேற்கொண்ட விஞ்ஞானிகள் இது கொரோனாவின் புதிய அறிகுறியாக இருக்கலாம். இப்படி ஏற்படுவது மிக அரிதாக இருந்தாலும் இந்தப் பாதிப்பு ஏற்பட்டவர்கள் உணவை சாப்பிட முடியாமல் தவிக்க வேண்டிய நிலைமை ஏற்படலாம் எனவும் எச்சரித்து உள்ளனர். மேலும் இந்த அறிகுறிகளைக் கொண்டவர்களுக்கு உணவை பார்த்தாலே அருவருப்பாகத் தோன்றலாம். வாந்தி வருவது போல குமட்டிக் கொண்டும் வரலாம் எனவும் கூறியுள்ளனர்.

More News

இந்த வாரம் மட்டுமல்ல, அடுத்த வாரமும் ஆரி, கேபியை நாமினேட் செய்யும் ஹவுஸ்மேட்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் நடந்த கோழி-நரி டாஸ்க் போட்டியாளர்களுக்கு இடையே பெரும் கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தியது என்பதும்

ரம்யா பாண்டியன் சகோதரர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

பிக்பாஸ் வீட்டில் நேற்று அர்ச்சனா வெளியேறியதை அடுத்து தற்போது 9 பேர் உள்ளனர். இன்னும் ஒரு சில வாரங்களில் இறுதி போட்டி நடைபெற இருக்கும் நிலையில் இவர்களில் 4 பேர் இறுதிப்போட்டிக்கு செல்வார்கள்

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் பெண்களுக்கு தாடி வளருமா??? சர்ச்சை விளக்கம்!!!

கொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பூசியை செலுத்திக் கொண்டால் ஒருவேளை ஆண்களுக்கு பெண் தன்மை வரலாம்

இன்ஸ்டாகிராமில் வேற லெவல் பண்ணும் அஜித்-விஜய் பட நடிகை!

அஜித் நடித்த 'வரலாறு', விஜய் நடித்த 'திருமலை' விக்ரம் நடித்த 'ஜெமினி' கமல்ஹாசன் நடித்த 'அன்பே சிவம்', பிரசாந்த் நடித்த 'வின்னர்' உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களிலும்

இந்த வார நாமினேஷனில் குறி வைக்கப்பட்டவர்கள் யார் யார்?

ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை பிக்பாஸ் வீட்டில் நாமினேஷன் படலம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரமும் நாமினேஷன் நடைபெறுகிறது.