பிக்பாஸ் நிகழ்ச்சியில் கழுதை.. களத்தில் இறங்கிய பீட்டா அமைப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கழுதை பயன்படுத்தப்பட்ட நிலையில் பீட்டா அமைப்பு உடனடியாக களத்தில் இறங்கி, கழுதையை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
பிக் பாஸ் தமிழ் 8வது சீசன் ஆரம்பித்த அதே நாளில் பிக் பாஸ் ஹிந்தி 18வது சீசன் ஆரம்பித்தது. இந்த நிகழ்ச்சியில் தமிழ் நடிகை ஸ்ருதிகா உள்பட 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இந்தி பிக் பாஸ் ஹவுஸ் மேட்டுகளுக்கு அளித்த டாஸ்க்கில் ஒரு கழுதையை பராமரிக்க வேண்டும் என்றும், அதற்காக ஒரு கழுதையை அனுப்பி வைத்துள்ளனர். கழுதை தங்குவதற்கு அங்கு தனியாக இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்த புரமோ வீடியோ வெளியான நிலையில், சல்மான் கான் மற்றும் பிக் பாஸ் தயாரிப்பாளர்களுக்கு பீட்டா இந்தியா கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில், விலங்குகளை பொழுது போக்குவதற்காக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும், இது விலங்குகளுக்கு மன அழுத்தம் மற்றும் பார்வையாளர்களுக்கு மன உளைச்சல் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளது.
எனவே உடனடியாக கழுதையை ஒப்படைக்க வேண்டும் என்று பீட்டா அமைப்பு தெரிவித்துள்ளது. இதற்கு பிக் பாஸ் தரப்பில் இருந்து என்ன பதில் அளிக்க போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Dear @BeingSalmanKhan sir and @BiggBoss makers,
— Adhvik Rajput 👑 (@adhvik_46) October 10, 2024
As a fan, I urge you to release #SidharthShukla from the #BiggBoss house, bcz he deserves respect and should be treated lyk others 🙏🏻#BiggBoss18#BB18 #VivianDsena#RajatDalalpic.twitter.com/ICzSwC8dpO
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments