ரஜினி மகளின் முக்கிய கோரிக்கையை ஏற்றுக்கொண்டது மத்திய அரசு

  • IndiaGlitz, [Sunday,December 11 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா, சமீபத்தில் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடுவை சந்தித்தபோது ஸ்டண்ட் கலைஞர்களுக்கும் தேசிய விருது வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

இந்த கோரிக்கை தற்போது ஏற்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் 64வது தேசிய விருது வழங்கும் விழாவில் சிறந்த ஸ்டண்ட் இயக்குனர் பிரிவையும் சேர்க்க அமைச்சர் வெங்கையா நாயுடு ஒப்புதல் அளித்துள்ளார். அதுமட்டுமின்றி சிறந்த ஒலியமைப்பு மற்றும் சிறந்த லொக்கேஷன் ஒலிப்பதிவாளர் ஆகிய பிரிவுகளுக்கும் இனி தேசிய விருது வழங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஸ்டண்ட் கலைஞர்களின் வாழ்க்கை குறித்து ஐஸ்வர்யா தனுஷ் 'சினிமா வீரன்' என்ற பெயரில் குறும்படம் ஒன்றை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இளம்பெண்களின் கனவு நாயகன் 'ஆர்யா'வுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

இளையதலைமுறை நடிகர்களில் முன்னணி நடிகர்களில் ஒருவரும் இளம்பெண்களின் கனவு நாயகனுமான ஆர்யா, இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தை வெளிப்படுத்த சட்டரீதியாக போராடுவேன். மன்சூர் அலிகான்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவருக்கு உண்மையில் என்ன நடந்தது என்பதை வெளியே கொண்டு வர வேண்டும் என்று பிரதமருக்கு சமீபத்தில் நடிகை கவுதமி கடிதம் எழுதியிருந்தார்.

திமுக தலைவரை சந்தித்த ரஜினிகாந்த்-வைரமுத்து

முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகிய இருவரிடமும் நல்ல நட்புடன் உள்ள மிகச்சிலரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் ஒருவர்.

ஜெயலலிதா மறைவுக்கு பின் விஜய் எடுத்த அதிரடி முடிவு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் பதவி சுகம் பெற்று ஒருசிலர் அவரது உடல் வைக்கப்பட்டிருக்கும் இடத்தின் அருகிலேயே சிரித்த போஸில் செல்பி எடுத்த கொடிமையை சமூக வலைத்தளங்கள் மூலம் பார்த்தோம்.

தொண்டன் படத்தில் சமுத்திரக்கனி-விக்ராந்த் கேரக்டர்கள் என்ன?

சமுத்திரக்கனி நடிக்கவுள்ள 'தொண்டன்' படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.