திரையில் ஒளிர்ந்த காலத்தால் அழியாத காதல் திரைப்படங்கள்: பாகம் 1

  • IndiaGlitz, [Wednesday,February 14 2018]

திரையில் ஒளிர்ந்த காலத்தால் அழியாத காதல் திரைப்படங்கள்: பாகம் 1

அன்பே வா (1966)


எம்ஜிஆர் , சரோஜாதேவி, நாகேஷ் நடிப்பில் ஏ.சி.திருலோகசந்தர் இயக்கிய ஜாலியான காதல் திரைப்படம். முதல் பாதி முழுவதும் எம்ஜிஆர், சரோஜாதேவி ஆகியோர்களின் செல்ல சண்டைகள், பின் இரண்டாம் பாதியில் இருவருக்கும் காதல் ஏற்பட்டவுடன் நடக்கும் ரொமான்ஸ் காட்சிகள் என படம் முழுவதும் காதல் ரசம் சொட்ட சொட்ட, அந்த கால காதலர்கள் அதிகம் ரசித்த படம். அலட்டிக்கொள்ளாத எம்.ஜி.ஆர் நடிப்பு ஒருபுறம், துடிப்பும் துள்ளலும் நிறைந்த சரோஜாதேவி நடிப்பு ஒருபுறம் என காதலர்களின் காவியப்படமாக அமைந்தது. ஏவிஎம் நிறுவனத்தின் இந்த படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.

வசந்த மாளிகை (1972)


சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ நடிப்பில் ராமநாயுடு இயக்கிய காலத்தால் அழியாத காதல் காவியம். செல்வ செழிப்புள்ள ஒரு ஜமீன்தாரை தன்னுடைய காதலால் நல்லவனாக மாற்றிய ஒரு ஏழைப்பெண்ணின் காதல் கதை தான் வசந்த மாளிகை. இரண்டாம் பாதியில் காதலில் ஒரு சின்ன பிணக்கு ஏற்பட்டு அதனால் பிரிவு ஏற்பட்டு கிளைமாக்ஸில் உருக்கமான காட்சிகளுடன் காதலர்கள் இணையும் இந்த படம் சிவாஜி கணேசனின் குறிப்பிடத்தக்க படங்களில் ஒன்றாகும்.

நெஞ்சில் ஓர் ஆலயம் (1962)


ஒரே ஒரு மருத்துவமனை கட்டிடத்தில் கிட்டத்தட்ட படத்தின் மொத்த காட்சிகளும் அமைந்த படம் தான் இது. ஸ்ரீதர் இயக்கிய இந்த படத்தில் ஒரு பக்கம் தனது காதல் கணவர் முத்துராமன் புற்றுநோயால் உயிருக்கும் போராடி வரும் நிலையில் இன்னொரு பக்கம் தனது பழைய காதலர் கல்யாண்குமார் அவருக்கு வைத்தியம் பார்க்கும் நிலையில் இருவருக்கும் இடையே நடக்கும் மனப்போராட்டத்தை அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் தேவிகா. இந்த முக்கோண காதல் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

காதலிக்க நேரமில்லை (1964)


முழுக்க முழுக்க நகைச்சுவை அம்சங்களுடன் கூடிய ஒரு காதல் படம் இதுபோல் இன்றுவரை வெளியாகவில்லை. அக்கா, தங்கையை காதலிக்கும் நண்பர்கள், அவர்களுடைய தந்தையிடம் சம்மதம் பெற போடும் மாறுவேஷம், என படம் முழுக்க ஒரே சிரிப்பு மயம்தான். அதுமட்டுமின்றி இந்த படத்தில் டி.எஸ்.பாலையா, நாகேஷ் காமெடி இன்று வரை பிரபலம்.

ஒரு தலை ராகம் (1980)


சங்கர், ரூபா நடிப்பில் டி.ராஜேந்தர் இசையில் உருவான இந்த படம் அந்த கால இளைஞர்களின் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படம். ஒரு தலையாக காதலிக்கும் ஹீரோவை, ஹீரோயின் மனதிற்குள் காதலித்தாலும் வெளியே சொல்லாமல் பூட்டி வைத்து, இறுதியில் தனது காதலை சொல்லும்போது, அதை கேட்க ஹீரோ உயிருடன் இல்லாத உருக்கமான இந்த காதல் கதை காதலர்களின் முத்தான படங்களில் ஒன்று. இந்த படத்தின் அனைத்து பாடல்களும் மிகப்பெரிய ஹிட் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ராஜபார்வை (1981)


கமல்ஹாசனின் அபாரமான நடிப்பு வெளிப்பட்ட படங்களில் ஒன்று. பார்வைக்குறைபாடு உள்ள ஒரு இந்து இளைஞனுக்கும், பணக்கார கிறிஸ்துவ பெண் ஒருவருக்கும் விளைகிற காதலையும் அதில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் விவரிக்கின்றது இந்த படம். இந்த படத்தின் இறுதியில், தேவாலயத்தில், மற்றொருவனுடன் தனது காதலிக்கு திருமணம் நடக்கவிருக்கும் நிலையில் காதலியின் விசும்பல் ஒலியின் மூலம் அவளுக்கு இந்த திருமணத்தில் விருப்ப்பமில்லை எனத் தெரிந்து கொள்ளும் நாயகன், தன் நண்பனின் உதவியுடன் செய்யும் சாகசம் தான் கிளைமாக்ஸ். கமல்ஹாசனின் 100வது படமான இந்த படத்தை சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கியிருந்தார்.

அலைகள் ஓய்வதில்லை (1981)


பாரதிராஜா இயக்கத்தில் கார்த்திக், ராதா அறிமுகமான இந்த படம் ஒரு ஏழை இந்து இளைஞனுக்கும், ஒரு பணக்கார கிறிஸ்துவ பெண்ணுக்கும் உண்டாகும் காதல் குறித்த படம். இறுதியில் காதலா? மதமா? என்று வரும்போது காதலர்கள் தங்களுடைய மத சின்னங்களை உடைத்தெறியும் காட்சி பெரும் புரட்சியாகவே கருதப்பட்டது. இசைஞானியின் இசையில் உருவான இந்த படத்தின் பாடல்கள் இந்த படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய உறுதுணையாக இருந்தது.

மூன்றாம் பிறை (1982)


கமல்ஹாசனுக்கு முதன்முதலில் தேசிய விருதை பெற்றுத்தந்த படம், தேசிய விருதை ஸ்ரீதேவி நூலிழையில் இழந்த படம், பாலுமகேந்திராவின் அற்புதமான ஒளிப்பதிவு மற்றும் இயக்கத்தில் உருவான படம், கண்ணதாசனின் கடைசி பாடலான காதல் தாலாட்டு பாடல் 'கண்ணே கலைமானே' என்ற பாடல் இடம் பெற்ற படம், இசைஞானியின் அபாரமான இசையில் உருவான படம் என இந்த படத்தின் பெருமையை அடுக்கி கொண்டே போகலாம். ஒரு விபத்தில் பழைய நினைவுகளை மறந்து குழந்தை போல் மாறிய ஸ்ரீதேவியை கமல் காதலிப்பதும், பின்னர் அவருக்கு ஞாபகம் திரும்பியதும் தன்னை யார் என்பதை நிரூபிக்க தவிப்பதும் தான் இந்த படத்தின் ஹைலைட்.

புதுக்கவிதை (1982)


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை ஒரு ஆக்சன் ஹீரோவாக மட்டுமே அனைவரும் பார்த்த நிலையில் அவராலும் மெல்லிய காதல் இழையோடும் ஒரு படத்தில் நடித்து அசத்த முடியும் என்பதை நிரூபித்த படம். எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் உருவான இந்த படம். ஹீரோயிசத்தை ஒதுக்கி வைத்து கிட்டத்தட்ட பாதி படத்தில் நாயகியிடம் 'கருப்பன்' என திட்டு வாங்கும் ரஜினியின் இந்த கேரக்டர் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. ரஜினி படம் என்றால் காதல் என்பது சினிமாத்தனமாக இருந்த காலத்தில் யதார்த்தத்தமாக, ஒரு மென்மையான காதலையும் அது தந்துபோகும் வலியையும் மையமாக வைத்து ரஜினி நடித்த ஒரே படம் இதுமட்டுமே என்று கூறலாம்.

முதல் மரியாதை (1985)


வயதான முதியவர் ஒருவருக்கும், இளம்பெண் ஒருவருக்கும் ஏற்படும் ஒரு கிராமத்து காதல் தான் இந்த படம். வயதான பின் வரும் காதல் உறவை கொச்சைப்படுத்தாமல் காதலனின் குடும்பத்தின் நலனிற்காக ஒரு கொலையே செய்ய துணியும் அபாரமான கேரக்டரில் ராதா நடித்திருந்தார். முதல்முறையாக சிவாஜி கணேசனை ஓவர் ஆக்டிங் இல்லாமல் இயல்பாக நடிக்க வைத்த பெருமையை இந்த படத்தின் இயக்குனர் பாரதிராஜா பெற்றார். இசைஞானியின் இசையும், வைரமுத்துவின் வரிகளும் இந்த படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணங்கள்.

கடலோர கவிதைகள் (1986)


பாரதிராஜா இயக்கத்தில் சத்யராஜ், ரேகா நடிப்பில் வெளிவந்த ஒரு வெற்றி படம் தான் இது. ஒரு முரட்டு வாலிபனுக்கும், மெல்லிய மனம் கொண்ட ஒரு ஆசிரியைக்கும் உண்டாகும் காதல், அதனால் இரு வீட்டிலும் ஏற்படும் பிரச்சனைகள் இறுதியில் எதிர்பாராத முடிவு என உருவாகிய வித்தியாசமான காதல் படம். இசைஞானியின் இசையில் மனதை வருடும் பாடல்கள் இந்த படத்தின் மிகப்பெரிய பிளஸ்.

புன்னகை மன்னன் (1986)


இயக்குனர் இமயம் கே.பாலசந்தர் இயக்கத்தில் கமல், ரேவதி, ரேகா நடிப்பில் இசைஞானி இசையில் உருவான இந்த படம், காதல் தோல்வி என்றால் அதற்கு தற்கொலை தான் தீர்வா? என காதலர்கள் எடுக்கும் தவறான முடிவுக்கு சவுக்கடி கொடுக்கும் வகையில் உருவாகியது. பாடல்கள், நடனம், திரைக்கதை, காட்சி அமைப்புகள் என அனைத்தும் மிகச்சரியாக அமைந்த இந்த படம் காதலர்களுக்கான ஒரு படம் தான்

More News

குஜராத் தலைவர் ஜிக்னேஷ் மேவானியையும் விட்டு வைக்காத பிரியாவாரியர் கண்ணசைவு

மலையாள நடிகை பிரியாவாரியாரின் ஒரே ஒரு கண்ணசைவும், புருவ நடனமும் தென்னிந்திய ரசிகர்களை மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் உள்ள இளைஞர்களை சுண்டி இழுத்துள்ளது

அஜித்தின் 'விசுவாசம்' இசையமைப்பாளர் அதிகாரபூர்வ அறிவிப்பு

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கவுள்ள 'விசுவாசம்' படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு

இந்த சிவராத்திரி எனக்கு ஒரு மேஜிக் அனுபவம்: தமன்னா

நேற்று உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் சிவராத்திரி கொண்டாடப்பட்டது தெரிந்ததே. அந்த வகையில் கோவை வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஈஷா யோகா மையத்தில்

வறுமையில் வாடும் பாட்டி நடிகைக்கு நடிகர் சங்கம் செய்த உதவி

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நாசர் தலைமையிலான அணி நிர்வாகத்தை கைப்பற்றியதில் இருந்து பல நலிவுற்ற நடிகர் நடிகைகளுக்கு உதவி செய்து வருவதை பார்த்து வருகிறோம்.

கார்த்திக் சுப்புராஜின் இணை இயக்குனரின் புதிய படம்

பிரபல இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய பிட்சா, ஜிகர்தண்டா, இறைவி போன்ற படங்களில் இணை இயக்குனராக பணிபுரிந்த விஜய்ராஜ் என்பவர் ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார்.