சிறந்த இயக்குனர் விருதினை பெறுகிறார் தனுஷ்
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பல்வேறு அவதாரங்களில் ஜொலித்த தனுஷ் சமீபத்தில் இயக்குனராகி இயக்கிய படம் 'ப.பாண்டி. இந்த திரைப்படம் அனைத்து தரப்பினர்களாலும் வரவேற்கப்பட்டதோடு வசூல் ரீதியாகவும் நல்ல வெற்றி பெற்று 50 நாட்களை தாண்டியது.
இந்த நிலையில் சலங்கை ஒலி, சங்கராபரணம் புகழ் பழம்பெரும் இயக்குனர் கே.விஸ்வநாத் பெயரில் விருதுகளை நடிகை துளசி வழங்க உள்ளார். 'சங்கராபரணம்' என்ற பெயரில் வழங்கப்படவுள்ள இந்த விருதுகள் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழி துறையினருக்கு வழங்கப்பட உள்ளதாக நடிகை துளசி தெரிவித்துள்ளார்.
இதன்படி இந்த ஆண்டிற்கான 'சங்கராபரணம் விருது `தங்கல்` இந்திப் படத்தில் சிறப்பாக நடித்த அமிர் கான், `உட்தா பஞ்சாப்` படத்தில் சிறப்பாக நடித்த அலியா பட், `ப.பாண்டி` படத்தை சிறப்பாக இயக்கிய தனுஷ், `ஜனதா காரேஜ்` என்ற தெலுங்கு படத்தில் சிறப்பாக நடித்த ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோருக்கு விருது வழங்கப்படவுள்ளதாக நடிகை துளசி அறிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com