அமேசானையே முந்திய நிறுவனம்… உலகின் நம்பர் ஒன் பணக்காரர் ஆனார் பெர்னார்ட் அர்னால்ட்!

உலகின் நம்பர் ஒன் பணக்காரர் என்ற இடத்தை நீண்டகாலமாக தக்க வைத்துக் கொண்டு இருந்தவர் அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் பெசோஸ். தற்போது அவருடைய சொத்து மதிப்பை காட்டிலும் ஆடம்பரப் பொருளை விற்கும் லூயிஸ் உய்ட்டன் நிறுவனத்தின் சொத்து மதிப்பு எகிறி இருக்கிறது. இதனால் உலகின் நம்பர் ஒன் பணக்காரர் என்ற இடத்தை முதல் முறையாகப் பிடித்து இருக்கிறார் பெர்னார்ட் அர்னால்ட்.

 

 

கொரோனா பரவல் காரணமாக உலக வர்த்தகத்தில் ஏற்ற இறக்கங்கள் தொடர்ந்து வருகின்றன. அதிலும் பல நாடுகளில் ஊரடங்கு காரணமாக இ-சேவை விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் அமேசான், பிளிஃப்கார்ட் போன்ற நிறுவனத்தின் பங்குகள் தற்போது சரியத் தொடங்கி இருக்கின்றன.

இந்நிலையில்  சீனா போன்ற சில நாடுகளில் மட்டும் ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டு அங்கு இயல்பு வாழ்க்கை துவங்கி உள்ளது. இதனால் அந்நாடுகளில் மக்கள் விழா, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளைக் கொண்டாடத் துவங்கியுள்ளனர். இந்த அடிப்படையில் சீனாவில் லூயிஸ் உயிட்டன் நிறுவனத்தின் பொருட்கள் மலைபோல் விற்று தீர்ந்து தற்போது அந்நிறுவனத்தின் சொத்து மதிப்பு உயர்ந்து இருக்கிறது.

தற்போது லூயிஸ் உய்ட்டன் நிறுவனத்தின் சொத்து மதிப்பு 186.3 பில்லியன் எனக் கணக்கிடப்பட்டு உலகின் நம்பர் ஒன் பணக்காரர் ஆகி இருக்கிறார் பெர்னார்ட் அர்னால்ட். இவருக்கு அடுத்த நிலையில் அமேசானின் சொத்து மதிப்பு 186 பில்லியன் என்ற நிலையில் ஜெஃப் பெசோஸ் உலகின் இரண்டாவது பணக்காரராகப் பின்னுக்குத் தள்ளப்பட்டு உள்ளார். அடுத்து எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 147.3 பில்லியனாக இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

லூயிஸ் உய்ட்டன் நிறுவனம் பேஷன் விஷயங்களில் அதிக கவனம் செலுத்தி உலகின் விலையுயர்ந்த ஆடம்பரப் பொருட்களை விற்பனை செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது. மேலும் பென்டி, டியோர், கிவென்சே போன்ற பல முன்னணி பிராண்டுகளுக்கும் இந்நிறுவனம் தலைமையாகச் செயல்படுகிறது.

More News

இப்படியும் ஒரு முதலாளி? கொரோனா நேரத்தில் டாடா வெளியிட்ட நெகிழ்ச்சி அறிவிப்பு!

கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலையால் இந்தியா பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது

இந்தியாவில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின்பும் மாஸ்க் போடணுமா?

அமெரிக்காவில் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட மக்கள், கூட்டம் அதிகம் இல்லாத இடங்களுக்குச் செல்லும்போது

உங்களுக்கு வெக்கமா இல்லையா...? மதுவந்தியை சரமாரியாக கேள்வி கேட்ட பெண்...!

பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் கைதான சம்பவம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஏ.ஆர்.ரஹ்மானிடம் பி சுசீலா கேட்ட உதவி!

ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரஹ்மான் அவர்களிடம் பிரபல பின்னணி பாடகி பி சுசிலா கேட்ட உதவி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

கார்த்தியின் 'கைதி 2' உருவாகுமா? தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தகவல்!

கார்த்தி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக்கிய 'கைதி' திரைப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியானது.