அமேசானையே முந்திய நிறுவனம்… உலகின் நம்பர் ஒன் பணக்காரர் ஆனார் பெர்னார்ட் அர்னால்ட்!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகின் நம்பர் ஒன் பணக்காரர் என்ற இடத்தை நீண்டகாலமாக தக்க வைத்துக் கொண்டு இருந்தவர் அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் பெசோஸ். தற்போது அவருடைய சொத்து மதிப்பை காட்டிலும் ஆடம்பரப் பொருளை விற்கும் லூயிஸ் உய்ட்டன் நிறுவனத்தின் சொத்து மதிப்பு எகிறி இருக்கிறது. இதனால் உலகின் நம்பர் ஒன் பணக்காரர் என்ற இடத்தை முதல் முறையாகப் பிடித்து இருக்கிறார் பெர்னார்ட் அர்னால்ட்.
கொரோனா பரவல் காரணமாக உலக வர்த்தகத்தில் ஏற்ற இறக்கங்கள் தொடர்ந்து வருகின்றன. அதிலும் பல நாடுகளில் ஊரடங்கு காரணமாக இ-சேவை விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் அமேசான், பிளிஃப்கார்ட் போன்ற நிறுவனத்தின் பங்குகள் தற்போது சரியத் தொடங்கி இருக்கின்றன.
இந்நிலையில் சீனா போன்ற சில நாடுகளில் மட்டும் ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டு அங்கு இயல்பு வாழ்க்கை துவங்கி உள்ளது. இதனால் அந்நாடுகளில் மக்கள் விழா, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளைக் கொண்டாடத் துவங்கியுள்ளனர். இந்த அடிப்படையில் சீனாவில் லூயிஸ் உயிட்டன் நிறுவனத்தின் பொருட்கள் மலைபோல் விற்று தீர்ந்து தற்போது அந்நிறுவனத்தின் சொத்து மதிப்பு உயர்ந்து இருக்கிறது.
தற்போது லூயிஸ் உய்ட்டன் நிறுவனத்தின் சொத்து மதிப்பு 186.3 பில்லியன் எனக் கணக்கிடப்பட்டு உலகின் நம்பர் ஒன் பணக்காரர் ஆகி இருக்கிறார் பெர்னார்ட் அர்னால்ட். இவருக்கு அடுத்த நிலையில் அமேசானின் சொத்து மதிப்பு 186 பில்லியன் என்ற நிலையில் ஜெஃப் பெசோஸ் உலகின் இரண்டாவது பணக்காரராகப் பின்னுக்குத் தள்ளப்பட்டு உள்ளார். அடுத்து எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 147.3 பில்லியனாக இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
லூயிஸ் உய்ட்டன் நிறுவனம் பேஷன் விஷயங்களில் அதிக கவனம் செலுத்தி உலகின் விலையுயர்ந்த ஆடம்பரப் பொருட்களை விற்பனை செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது. மேலும் பென்டி, டியோர், கிவென்சே போன்ற பல முன்னணி பிராண்டுகளுக்கும் இந்நிறுவனம் தலைமையாகச் செயல்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com