'கோட்' படத்திற்கு முன்பே ரிலீசாகும் வெங்கட்பிரபுவின் இன்னொரு படம்.. தேதி அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி உள்ள ’கோட்’ திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு முன்பே வெங்கட் பிரபுவின் இன்னொரு படம் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகின் பல இயக்குனர்கள் சொந்தமாக படங்களை தயாரித்து வெளியிட்டு வருகின்றனர் என்பது தெரிந்ததே. பா ரஞ்சித் உட்பட சில இயக்குனர்கள் தயாரிப்பாளராகி உள்ள நிலையில் வெங்கட் பிரபு தயாரித்துள்ள ’நண்பன் ஒருவன் வந்த பிறகு’ என்ற படம் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்த ’மீசையை முறுக்கு’ என்ற படத்தில் நடித்த நடிகர் ஆனந்த் இயக்கியுள்ள ’நண்பன் ஒருவன் வந்த பிறகு’ என்ற திரைப்படத்தில் கலக்கப்போவது யாரு பாலா, ஆர்ஜே விஜய், குமரவேல், பவானி ஸ்ரீ, இர்பான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் 13 கேரக்டர்கள் இருப்பதாகவும் இந்த கேரக்டர்கள் அனைவரும் நண்பர்களாக இருக்கும் நிலையில் அவர்களுக்குள் உள்ள ஜாலியான அனுபவங்கள் தான் இந்த படத்தின் கதை என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தின் இரண்டு பாடல்களை தனுஷ் மற்றும் ஜிவி பிரகாஷ் பாடி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
’நண்பன் ஒருவன் வந்த பிறகு’ திரைப்படம் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அதற்கு அடுத்த மாதம் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான ’கோட்’ திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
We are Coming for the friendship weekend!! Get ready to celebrate friendship in theatres!! #NOVPfromAug2nd #NanbanOruvanVanthaPiragu
— venkat prabhu (@vp_offl) July 10, 2024
Release by @SakthiFilmFctry @sakthivelan_b
Written , Directed & performed by @ActorAnanth
Produced by @Aishwarya12dec @masala_popcorn in… pic.twitter.com/KhIpBbB4qe
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments