தலையில் ஹெல்மெட் இல்லை … இளைஞரிடம் 2 மீட்டர் நீளத்துக்கு சலானை நீட்டிய போலீசார்…

  • IndiaGlitz, [Tuesday,November 03 2020]

 

கர்நாடகாவில் காய்கறி கடை வைத்து நடத்தி வரும் தொழிலாளி ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஹெல்மட் அணியாமல் தனது இருசக்கர வாகனத்தில் சென்றிருக்கிறார். அவரை வழிமறித்து நின்ற போக்குவரத்து போலீசார் 2 மீட்டர் நீளத்துக்கு ஒரு சலானை அந்த இளைஞரிடம் நீட்டி இருக்கின்றனர். சரி என்ன இருக்க போகிறது, ஒரு 200 ரூபாய் பைனா இருக்கும் என நினைத்து வாங்கிய அந்த இளைஞர் மயங்கி விழாத குறையாக என்ன சார் இது? என அதிர்ந்து போய் கேட்டிருக்கிறார்.

அதற்கு பதில் அளித்த போக்குவரத்துத் துறை போலீஸ் நீங்கள் இதுவரை 77 முறை சாலை விதிமுறைகளை மீறி இருக்கிறீர்கள். அதனால் ரூ.42,000 அபராதம் செலுத்த வேண்டி இருக்கிறது. இப்பவே கட்டுறீங்களா? அல்லது நீதிமன்றத்தில் வந்து கட்டுறீங்களா? எனக் கேட்டு இருக்கிறார். இதைக் கேட்ட அந்த இளைஞருக்கு பயங்கர ஷாக் ஏற்பட்டு இருக்கிறது.

அதற்கு பின்புதான் தெரிந்து இருக்கிறது. நகர்ப்புற பகுதிகளில் சாலை விதிகளை மதிக்காமல் செல்லும் ஒவ்வொரு முறையும் சாலையில் உள்ள சிசிடிவி கேமராக்கள் கணக்கு எடுத்துக் கொள்கின்றன. பின்பு ஒருமுறை மாட்டினால் போதும் ஒட்டு மொத்தத்தையும் செலுத்த வேண்டிவரும். எனவே விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் நம்மை யாரும் பார்க்கவில்லை என்று சாலையில் சென்றாலும் ஒரு நாளைக்கு மாட்டிக் கொள்வோம். எனவே சாலை விதிமுறைகளை கடைப்பிடிப்பது எல்லோருக்கும் நல்லது.

இந்நிலையில் அந்த இளைஞர் “என்னால் இப்போது அபராதத்தை செலுத்த முடியாது. சிறிது அவகாசம் கொடுங்கள்“ என போலீசாரிடம் வேண்டுகோள் விடுத்து இருக்கிறார். மேலும் இச்சம்பவம் குறித்து தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்ட அந்த இளைஞர் என்னுடைய பைக்கை விட அபராதத் தொகை ரொம்ப அதிகம் எனத் தனது மனக்குறையை பதிவு செய்திருக்கிறார். இதேபோல ஒரு சம்பவம் கடந்த மாதமும் பெங்களூர் பகுதியில் நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

எஸ்.ஏ.சி தொடர்ந்த வழக்கு: விஜய் பட தயாரிப்பாளருக்கு சிறை!

இயக்குனரும் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் தொடர்ந்த பண மோசடி வழக்கில் விஜய் படத் தயாரிப்பாளருக்கு 3 மாதம் சிறை தண்டனை அளித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

திரையரங்குகளுக்கு என்னென்ன கட்டுப்பாடு: தமிழக அரசு அறிவிப்பு!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக திரையரங்குகள் கடந்த ஏழு மாதங்களாக மூடப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில் நவம்பர் 10 ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறக்க தமிழக அரசு அனுமதித்துள்ளது.

பாஜகவில் இணைந்தார் விஜய்சேதுபதி பட தயாரிப்பாளர்!

அஜித் நடித்த 'விஸ்வாசம்' உள்பட ஒரு சில திரைப்படங்களின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்ற நிறுவனம் கேஜேஆர் ஸ்டுடியோ என்பது தெரிந்ததே.

வருத்தப்பட்ட ரியோவின் மனைவி: வைரலாகும் டுவீட்

சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கு தாங்கள் மிஸ் செய்யும் நபர்கள் குறித்து பகிர்ந்து கொள்ளும் ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது.

ஆரி, அர்ச்சனா உள்பட 7 பேர் நாமினேஷனில்: யாரை யார் யார் நாமினேட் செய்தது?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று நடைபெற்ற நாமினேஷன் படலத்தில் ஆரி, அர்ச்சனா உள்பட 7 பேர் நாமினேஷன் செய்யப்பட்டனர்.