ரத்தக்காடாக மாறிவரும் ஐடி நகரம்… பழிக்குப் பழி… கொலைச் சம்பவங்கள்…
Send us your feedback to audioarticles@vaarta.com
நாட்டிலேயே பழிக்குப் பழி வாங்குவதற்காக ரத்தக்களரியில் ஈடுபடும் நகரங்களின் வரிசையில் பெங்களூர் முதல் இடத்தைப் பெற்றிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. கொலை வழக்குகள் பெரும்பாலும் காதல், சொத்து, கள்ளக்காதல், பழிக்குப் பழி போன்ற விவகாரங்களுக்காக ஏற்படுகிறது. அப்படி பழிக்குப் பழி வாங்கும் கொலைச் சம்பவங்களில் பெங்களூர் முதல் இடத்தைப் பிடித்து இருப்பதாகக் கூறப்படுகிறது. அதிலும் பெரிய தாதாக்களின் தலையீடு, துப்பாக்கி போன்ற அல்டிமேட் விவகாரங்களும் பெங்களூர் நகரத்தில் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டு பெங்களூருவில் பதிவான 210 கொலைகளில் 106 கொலைகள் பழிவாங்கும் செயலுக்காக நடைபெற்றதாக தேசிய குற்றப்பதிவு ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிவரத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதற்கு அடுத்தப்படியாக டெல்லியில் கடந்த 2019 ஆம் ஆண்டில் 505 கொலைகள் பதிவாகி இருக்கிறது என்றும் அதில் 87 கொலைகள் பழிவாங்கும் நோக்கத்தோடு நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. மேலும் 75% கொலைகள் சொந்தப் பகை அல்லது பழிக்கு பழி வாங்குதல் மற்றும் திட்டமிட்டு செய்யப்பட்ட கொலைகளாக உள்ளன என்றும் அந்த ஆணவ அறிக்கை தகவல் தெரிவித்து உள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தேசிய குற்றப்பதிவு ஆவணக் காப்பகம் வெளியிட்ட ஒரு அறிக்கையில் கள்ளக்காதலுக்காக நடைபெறும் குற்ற வழக்குகளில் முதல் இடம் சென்னைக்குத்தான் எனத் தெரிவித்து இருந்தது. தற்போது பழிக்குப் பழி வாங்கும் நோக்கத்தோடு நடைபெறும் கொலைகளில் பெங்களூருவிற்கு முதல் இடம் கிடைத்து இருக்கிறது. டெல்லி அந்தப் பட்டியலில் 2 ஆவது இடத்தைப் பிடித்து இருக்கிறது. இப்படி போட்டிப் போட்டுக் கொண்டு குற்றச் சம்பவங்கள் நடைபெற்றால் மனிதநேயம் காற்றில் பறந்து இறுதியில் நாடு சுடுகாடாகத்தான் மாறிப்போகும் எனப் பலரும் கவலைத் தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com