கொரோனா பாதிப்பால் அதிர்ச்சி: 5வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிப்பது மட்டுமின்றி அவர்களது மன அழுத்தத்தை போக்குவதற்கும் கவுன்சிலிங் கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் கொரோனா பாதித்த நபர் ஒருவர் மன அழுத்தத்தால் 5வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இதனை உறுதி செய்துள்ளது.

கர்நாடகா மாநிலத்தின் தலைநகர் பெங்களூருவில் கொரோனா வைரஸ் பாதித்த நபர் ஒருவர் சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் மருத்துவமனைக்கு வந்த நாள் முதல் மன அழுத்தத்தில் இருந்ததாக தெரிகிறது.

பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த நபருக்கு கொரோனா பாதிப்புடன், கடும் சுவாச பிரச்னையும், சிறுநீரக பிரச்னையும் இருந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த நிலையில், இன்று காலை மருத்துவமனையின் 5வது மாடியில் இருந்து குதித்து அந்த நபர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பெங்களூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

More News

துல்கர் சல்மானுக்கு ஆதரவாக கருத்த தெரிவித்த தமிழ் நடிகர்

மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடித்து தயாரித்த 'வரனே அவஷ்யமுண்டு' படத்தில் நாய்க்கு பிரபாகரன் என்று பெயர் வைத்தது சர்ச்சையானதால், தமிழ் மக்களிடம் துல்கர் சல்மான் மன்னிப்பு கேட்டுள்ளார்

தாத்தாவை புதைக்க குழி தோண்டிய பேரன் திடீர் மரணம்: அருகருகே புதைக்கப்பட்ட சோகம்

உத்தர பிரதேச மாநிலத்தில் உயிரிழந்த தாத்தாவை அடக்கம் செய்ய அவரது பேரன் குழி தோண்டியபோது திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார்

ஐபோனில் எடுக்கப்பட்ட ஆண்ட்ரியா படம்: ஒருசில நாட்களில் ரிலீஸ்

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக திரைப்படப்படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது

காவலர்களுக்கு உணவு வழங்கிய தன்னார்வலருக்கு கொரோனா: சென்னையில் அதிர்ச்சி

சென்னையில் காவலர்களுக்கு உணவு, தேநீர் வழங்கி வந்தவருக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவரிடம் உணவு மற்றும் தேநீர் வாங்கிய காவலர்கள் அனைவரையும்

கொரோனாவுக்கு நடுவில் மலேரியா பாதிப்பு!!! இரட்டிப்பு தாக்குதலில் ஜிம்பாப்வே!!!

உலக நாடுகள் அனைத்தும் கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கின்றன.