தம்பியை தூக்கில் தொங்கவிட்ட தந்தை, மொபைல் போனில் படம்பிடித்த மகள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தன் உடம்பிறந்த தம்பியை தனது தந்தையே தூக்கில் தொங்கவிட்ட கொடூர காட்சியை அவரது மகள் மொபைல் போனில் வீடியோ எடுத்த சம்பவம் ஒன்று பெங்களூர் அருகே நடந்துள்ளது.
பெங்களூரை சேர்ந்த 43வயது சுரேஷ் பாபு என்பவர் சேல்ஸ் ரெப் பணியில் உள்ளார். இவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சேல்ஸ் ரெப் பணியில் இருந்து கொண்டே சுரேஷ் ஏலச்சீட்டும் நடத்தியுள்ளார். ஆனால் ஏலச்சீட்டில் நஷ்டம் அடைய அதனை சரிக்கட்ட அதிகளவில் கடன் வாங்கியுள்ளார். ஒரு கட்டத்தில் கடன் கொடுத்தவர்கள் திருப்பி தரும்படி நெருக்குதல் கொடுத்ததால் வேறு வழியின்றி குடும்பத்துடன் தற்கொலை செய்ய முடிவு செய்தார். முதல்கட்டமாக தனது மகனை மின்விசிறியில் தூக்கில் தொங்கவிட்டார். மகன் கதறியபடியே உயிரை விட்டதை பார்த்து சுரேஷும் அவரது மனைவியும் கதறி அழுதனர். இந்த காட்சியை சுரேஷின் மகள் தனது மொபைலில் வீடியோ எடுத்துள்ளார்.
இதனையடுத்து சுரேஷின் மனைவி தூக்கில் தொங்கி உயிரை விட்டார். இதற்குள் அழுகுரல் கேட்டு அக்கம்பக்கத்தினர் போலீசில் புகார் அளிக்க, போலீசார் விரைந்து வந்து சுரேஷையும் அவரது மகளையும் தற்கொலை செய்வதில் இருந்து காப்பாற்றினர். இருப்பினும் மகனின் மரணத்திற்கு காரணமாக சுரேஷை போலீசார் கைது செய்தனர்
தாயும் தம்பியும் மரணம் அடைய, தந்தையும் சிறையில் இருக்க, 17 வயது மகள் மட்டும் யாருமின்றி நிர்க்கதியாக உள்ளது அந்த பகுதியில் உள்ளவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments