பெங்களூர் வரை பரவியது ஸ்டெர்லைட் போராட்டம்
- IndiaGlitz, [Thursday,May 24 2018]
தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் கடந்த பல ஆண்டுகளாக காவிரி பிரச்சனை இருந்தாலும் தமிழகத்தில் நடைபெற்று வரும் ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு பெங்களூர் மக்கள் ஆதரவு கொடுத்துள்ளது அனைவரையும் வியப்படைய செய்துள்ளது.
கடந்த 100 நாட்களுக்கும் மேலாக தூத்துகுடியில் இருந்து ஸ்டெர்லைட் ஆலையை வெளியேற்ற அந்த பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று நேற்றும் நேற்று முன் தினமும் காவல்துறையினர்களின் துப்பாக்கி சூடு சம்பவத்தால் 13 பேர் பலியான விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தூத்துகுடி சம்பவத்திற்கு கடந்த இரண்டு நாட்களாக தமிழகம் முழுவதிலும் உள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று பெங்களூரில் உள்ள பொதுமக்களும் ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு தங்களது ஆதரவை தெரிவித்ததோடு தமிழக அரசுக்கு தங்கள் எதிர்ப்பை உருவப்பொம்மையை எரித்து தெரிவித்தனர். மேலும் தமிழக அரசையும், ஸ்டெர்லைட் நிர்வாகத்தையும் எதிர்த்து கோஷமிட்டனர். ஸ்டெர்லைட் போராட்டத்தீ மெல்ல மெல்ல நாடு முழுவதும் பரவி வருவதால் ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்றே எதிர்பார்க்கப்படுகிறது
Bengaluru joins the protest against Thoothukudi Sterlite Copper Plant and police firing on protesters. #Thoothukudi #SterliteProtest pic.twitter.com/T8eTo4sQ00
— Pushkar_TNIE (@pushkarv) May 24, 2018