ஏஐ-வரவால் 90% ஊழியர்களை பணிநீக்கம் செய்த முக்கிய நிறுவனம்… திடுக்கிடும் தகவல்!

  • IndiaGlitz, [Friday,July 14 2023]

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தொழில்நுட்ப துறைகளில் உள்ள வேலை வாய்ப்புகளுக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சம் உலகம் முழுவதும் அதிகரித்து இருக்கும் நிலையில் பெங்களூரை சேர்ந்த நிறுவனம் ஒன்று தங்களது 90% ஊழியர்களை பணியை விட்டு நீக்கியிருப்பது பலருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூரை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனமான டுகான் (Dukan) நிறுவனம் வாடிக்கையாளர் சேவை பிரிவில் பணியாற்றி வந்த 90% ஊழியர்களை தற்போது பணியில் இருந்து நீக்கியிருக்கிறது. அதற்கு பதிலாக வாடிக்கையாளர் பிரிவில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புதிய சாட்போட் (AI Chatbot) இணையதளத்தை அந்த நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கிறது.

இதனால் வாடிக்கையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு 2 அல்லது 3 நிமிடங்களிலேயே தீர்வு கிடைத்து விடுவதாகவும் இந்த ஏஐ சாட்போட் தொழில்நுட்பம் மிக திறமையாக வேலை செய்வதாகவும் அந்த நிறுவனத்தின் சிஇஓ சுமித் ஷா தெரிவித்துள்ளார்.

முன்னதாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியைப் பார்த்து ஒட்டுமொத்த உலக மக்களும் சந்தேகத்தை வெளிப்படுத்தி வந்தனர். ஆனால் தற்போது ஏஐ தொழில்நுட்பங்கள் மனிதவளம் முதற்கொண்டு அனைத்துத் துறைகளிலும் ஆதிக்கத்தை செலுத்த துவங்கியிருக்கிறது.

இதனால் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் முதற்கொண்டு பெரிய நிறுவனங்கள் வரைக்கும் தங்களது லாப நோக்கங்களுக்கான எளிய வழியை தேட துவங்கியுள்ளனர். அவர்களுக்கு குறைந்த செலவில் மிக நேர்த்தியாக வேலைகளைச் செய்து முடிப்பதற்கு இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தற்போது கைக்கொடுக்க துவங்கியிருக்கிறது.

அந்த வகையில் பெங்களூரில் ஈகாமர்ஸ் வர்த்தகத்தை செய்துவரும் ஸ்டார்ட் அப் நிறுவனமான டுகான் தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை தனது வாடிக்கையாளர் சேவை பிரிவில் பயன்படுத்த துவங்கியுள்ளது. இதனால் 2 மணிநேரம் எடுத்துக்கொள்ளும் வேலைகளைக்கூட 2 அல்லது 3 நிமிடங்களுக்குள் செய்துமுடித்து விடுவதாகவும் மேலும் ஏஐ சாட்போட் சிறப்பாகவும் வேகமாகவும் செயல்படுகிறது என்றும் அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

பொருளாதார ரீதியாக வர்த்தக நிறுவனங்கள் தற்போது ஏஐ தொழில்நுட்ப அறிவை நம்ப ஆரம்பித்துவிட்டன. இதனால் இந்தியாவில் வேலைவாய்ப்புகளுக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சம் தற்போது எழுந்துள்ள நிலையில் இந்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஐடி துறைக்கான மத்திய இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் ஏஐ மூலம் வேலைவாய்ப்புகள் பற்றிய கவலைகள் முட்டாள்தனமானது என்று தெரிவித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

More News

கோலிவுட் முதல் பாலிவுட் வரை… வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்ற 10 சினிமா பிரபலங்கள்!

கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல சினிமா பிரபலங்கள் வயது, உடல்நிலை எனப் பல்வேறு காரணங்களுக்காக வாடகைத்தாய் மூலம் குழந்தைப் பெற்றுள்ளனர்.

நம்ம அடி வாங்குறாங்க பக்கம்தான் நிக்கணும்: 'கழுவேத்தி மூர்க்கன்' படம் குறித்து டி இமான்..!

அருள்நிதி நடிப்பில் கௌதம் ராஜ் இயக்கத்தில் உருவான 'கழுவேத்தி மூர்க்கன்'  என்ற திரைப்படம் கடந்த மே மாதம் 26 ஆம் தேதி வெளியானது என்பதும் இந்த படம் நல்ல விமர்சனத்தை பெற்றது என்பதையும் பார்த்தோம்.

'மாவீரன்' படம் பார்க்க வந்த விஜய் மனைவி சங்கீதா.. இன்னும் யாரெல்லாம் வந்துருக்காங்க பாருங்க..!

 சிவகார்த்திகேயன் நடித்த 'மாவீரன்' திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்தின் இடைவேளை வரையிலான விமர்சனம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

இன்னும் படமே ஆரம்பிக்கலை...  அதற்குள்ள பப்ளிக் ரிவிவ்யூ... எப்படிர்ராராராரா.. கலாய்த்த பிரபல தயாரிப்பாளர்..!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த 'மாவீரன்' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

பயந்தவனுக்கு தினம் தினம் சாவு, துணிஞ்சவனுக்கு ஒரு நாள் தான் சாவு: சந்தானம் நடித்த 'டிடி ரிட்டர்ன்ஸ்' டிரைலர்..!

சந்தானம் நடித்த 'தில்லுக்கு துட்டு' மற்றும் 'தில்லுக்கு துட்டு 2' ஆகிய இரண்டு படங்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த தொடரின் அடுத்த படம் 'டிடி ரிட்டர்ன்ஸ்' என்ற டைட்டிலில் வெளியாக உள்ளது