திரையுலகமே ஒரு விபச்சார விடுதி தான்: பிரபல நடிகை ஆவேசம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஏற்கனவே நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுவதாக மலையாள திரை உலகில் ஒரு பெரிய பூகம்பம் ஏற்பட்டுள்ள நிலையில் வங்காள திரை உலகமே ஒரு விபச்சார விடுதி தான் என பிரபல வங்காள நடிகை ஆவேசமாக கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக சமீபத்தில் முதல்வரிடம் தாக்கல் செய்யப்பட்ட ஹேமா அறிக்கையில் கூறப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் சில நடிகைகள் தங்களுக்கு ஏற்பட்ட கசப்பான பாலியல் தொல்லை அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல வங்காள நடிகை ரிதாபாரி சக்கரவர்த்தி என்பவர் மேற்கு வங்க திரையுலகம் ஒரு விபச்சார விடுதி என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது பேஸ்புக் பதிவில் முதல்வர் மம்தா பானர்ஜியை குறிப்பிட்டு ’மலையாள திரையுலகில் ஹேமா அறிக்கை மூலம் வெளிவந்துள்ள பாலியல் குற்றங்கள் போல் வங்காளத் திரையுலகிலும் என்ன நடக்கிறது என்பது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாலியல் கொடூர மனம் கொண்ட நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர் செய்த தவறுகளுக்கு எந்த தண்டனையும் அனுபவிக்காமல் தொடர்ந்து வேலை செய்கிறார்கள். புகழும் பெறுகிறார்கள். பெண்களை வெறும் சதையாக அவர்கள் நினைக்கும் போக்கு மாற வேண்டும்.
இத்தகைய கொடுமையானவர்களின் முகத்திரையை கிழிக்க வேண்டும், பாலியல் அரக்கர்களுக்கு எதிராக என்னோடு குரல் கொடுக்குமாறு சக நடிகைகளுக்கு அழைப்பு விடுகிறேன். தவறு செய்த ஆண்கள் பெரும்பாலானோர் செல்வாக்கு உள்ளவர்கள் என்பதால் உங்களுக்கு நடந்த கொடுமையை வெளியே சொல்ல நீங்கள் அச்சப்படுகிறீர்கள் என்பது எனக்கு தெரியும். ஆனால் எவ்வளவு நாள் தான் நாம் அமைதியாக இருப்பது?
ஒரு பெரிய கனவோடு திரைத்துறைக்கு வரும் இளம் நடிகைகள் மீது நமக்கு பொறுப்பு இல்லையா? இந்த துறை ஒரு இனிப்பு தடவிய விபச்சார விடுதி என்பதை அவர்கள் அறிய வேண்டாமா? என்று கூறியுள்ளார். அவரது இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments