அப்பா, அம்மா, கணவர்: பிரபல நடிகையின் குடும்பத்திற்கே கொரோனா!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் கடந்த சில மாதங்களாக மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் இதுவரை இந்தியாவில் பேர் 8.21 லட்சம் பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் 22,123 பேர்கள் கொரோனாவால் பலியாகி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கொரோனாவால் அப்பாவி பொது மக்கள் மட்டுமின்றி சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், திரை உலகினர், தொழிலதிபர்கள் என பாரபட்சம் இல்லாமல் அனைத்து தரப்பினர்களையும் கொரோனா தாக்கி வருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட திரையுலகினர் குறித்த தகவல்களை அவ்வப்போது பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் பிரபல வங்காள நடிகை கோயல் மாலிக் என்பவருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமன்றி அவரது 75 வயது தந்தையும் பழம்பெரும் நடிகருமான ரஞ்சித் மாலிக் என்பவருக்கும் அவரது தாயார் தீபா மாலிக் என்பவருக்கும் கொரோனா வைரஸ் பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டது.
மேலும் கோயல் மாலிக் கணவரும் தயாரிப்பாளருமான நிஸ்பால் சிங் என்பவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து நடிகை கோயல் மாலிக் மற்றும் அவரது குடும்பத்தினரும் கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நடிகை கோயல், தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை தனது டுவிட்டரில் உறுதி செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Baba Ma Rane & I are tested COVID-19 Positive...self quarantined!
— Koel Mallick (@YourKoel) July 10, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments