அப்பா, அம்மா, கணவர்: பிரபல நடிகையின் குடும்பத்திற்கே கொரோனா!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் கடந்த சில மாதங்களாக மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் இதுவரை இந்தியாவில் பேர் 8.21 லட்சம் பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் 22,123 பேர்கள் கொரோனாவால் பலியாகி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கொரோனாவால் அப்பாவி பொது மக்கள் மட்டுமின்றி சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், திரை உலகினர், தொழிலதிபர்கள் என பாரபட்சம் இல்லாமல் அனைத்து தரப்பினர்களையும் கொரோனா தாக்கி வருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட திரையுலகினர் குறித்த தகவல்களை அவ்வப்போது பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் பிரபல வங்காள நடிகை கோயல் மாலிக் என்பவருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமன்றி அவரது 75 வயது தந்தையும் பழம்பெரும் நடிகருமான ரஞ்சித் மாலிக் என்பவருக்கும் அவரது தாயார் தீபா மாலிக் என்பவருக்கும் கொரோனா வைரஸ் பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டது.

மேலும் கோயல் மாலிக் கணவரும் தயாரிப்பாளருமான நிஸ்பால் சிங் என்பவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து நடிகை கோயல் மாலிக் மற்றும் அவரது குடும்பத்தினரும் கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நடிகை கோயல், தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை தனது டுவிட்டரில் உறுதி செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

காதலிக்காக ஒன்று, பெற்றோருக்காக ஒன்று: ஒரே நேரத்தில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்

மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காதலிக்காக ஒரு திருமணமும் பெற்றோருக்காக ஒரு திருமணமும் என ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுக்கு தாலி கட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

காருக்குள் தலையை நுழைத்து இருமிய கிராம மக்கள்: பரிசோதனை செய்ய வந்த மருத்துவர்கள் அதிர்ச்சி

கொரோனா பரிசோதனை செய்ய வந்த மருத்துவர்களின் காருக்குள் தலையை விட்டு வேண்டும் என்றே இருமி, கொரோனாவை பரப்ப முயன்ற கிராம மக்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கமல்ஹாசனை அடுத்து பொன்னம்பலத்திற்கு உதவி ரஜினிகாந்த்

பிரபல வில்லன் நடிகரும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான பொன்னம்பலம் சிறுநீரக கோளாறு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

சபாஷ்… இந்தியாவுல… அதுவும் இந்த இடத்துல கொரோனா கட்டுப்பாட்டில் இருப்பது ஆச்சர்யம்தான்!!! WHO பாராட்டு!!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.

அவர் என் அண்ணன் போன்றவர்: பாலியல் புகார் கொடுத்த சென்னை கல்லூரி மாணவி திடீர் பல்டி

சென்னை மாநகராட்சியில் பொறியாளராக பணி செய்துவரும் கமலக்கண்ணன் என்பவர் தன்னிடம் பாலியல் தொல்லை செய்வதாகவும் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியதாகவும்