புற்று நோயில் இருந்து மீண்ட பிரபல நடிகை மாரடைப்பால் மரணம்: அதிர்ச்சியில் ரசிகர்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
இரண்டு முறை புற்று நோயிலிருந்து மீண்ட பிரபல நடிகை ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் அவரது ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
வங்க மொழியின் சின்னத்திரை உலகில் பெரும் புகழ் பெற்றவர் நடிகை ஐந்த்ரிலா ஷர்மா. இவர் பல வங்க மொழி தொடர்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகை ஐந்த்ரிலா ஷர்மா இரண்டு முறை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதன் பின் தனது தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சியின் காரணமாக தொட சிகிச்சை எடுத்து புற்றுநோயில் இருந்து குணமடைந்தார்.
இந்த நிலையில் திடீரென மூளை பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட இவர் கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மண்டை ஓட்டில் ரத்த கசிவு ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இந்த நிலையில் அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவரது உடல்நிலை தேறிய நிலையில் திடீரென நேற்று இரவு அவருக்கு தொடர்ச்சியாக பல முறை மாரடைப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இரண்டு முறை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தனது தன்னம்பிக்கையால் புற்றுநோயை வென்ற 24 வயது ஐந்த்ரிலா ஷர்மா மாரடைப்பு நோயால் காலம் அடைந்தது மரணமடைந்தது அவரது ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த ஐந்த்ரிலா ஷர்மா, ‘ஜூமுர்’ என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் அறிமுகமாகி அதன்பின், ‘அமி திதி நம்பர்1’, ‘லவ் கஃபே’ உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments