இங்கே யாரும் என்னை மதிப்பதில்லை...! - மேற்குவங்க கவர்னர் ஜக்தீப் தன்கர்.
Send us your feedback to audioarticles@vaarta.com
மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு தற்போது சரியாக இருக்கிறதா என்று கேட்டதற்கு தலைமை செயலாளரும், டி.ஜி.பியும் எனக்கு பதில் சொல்ல மறுத்துவிட்டனர். அது அதிர்ச்சியாக உள்ளது என மேற்குவங்க கவர்னர் கூறியுள்ளார்.
தேசிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக மேற்குவங்க முதல்வர் மம்தா இன்று மாபெரும் பேரணி அறிவித்திருந்தார். அந்த பேரணி தொடங்கி வெற்றிகரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் அந்த பேரணி பற்றியும் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு பற்றியும் மாநில கவர்னர் ஜக்தீப் தன்கர் அம்மாநில தலைமை செயலரிடமும் காவல் துறை டி.ஜி.பியிடமும் அறிக்கை கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் தர மறுத்துவிட்டனர் என தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
பெரும்பாலும் கவர்னர்கள் மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடுவதில்லை. ஆனால் பாஜக மத்திய அரசிற்கு பொறுப்பேற்ற பிறகு அவர்களது எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் கவர்னர்கள் ஆட்சி அதிகாரத்தில் தலையிடுவதும் அதற்கு மாநில அரசு எதிர்ப்பு தெரிவிப்பதும் தொடர்கதையாகி வருகிறது.
.@MamataOfficial. In view of enormity of situation I have called upon Chief Minister Mamata Banerjee to personally update me at Raj Bhawan tomorrow at a time of her choice. There is no response from Chief Secretary and DGP thus far. This is unfortunate and unexpected of them.
— Jagdeep Dhankhar (@jdhankhar1) December 16, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aarna Janani
Contact at support@indiaglitz.com