பாஜகவில் இனிமேல் என்னால் இருக்க முடியாது: கட்சியில் இருந்து விலகிய பிரபல நடிகை

  • IndiaGlitz, [Monday,March 02 2020]

டெல்லி வன்முறை குறித்து சர்ச்சைக்குரிய விதமாக பேசிய அனுராக் தாக்கூர், கபில் மிஸ்ரா ஆகியோர் இருக்கும் கட்சியில் இனிமேலும் தன்னால் இருக்க முடியாது என பிரபல நடிகை ஒருவர் அக்கட்சியிலிருந்து விலகி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் சிஏஏ சட்டத்திற்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற பேரணியில் பயங்கர வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறையில் 40 பேர் அளவில் கொல்லப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த 2013ம் ஆண்டு பாஜகவில் இணைந்த மேற்குவங்கத்தை சேர்ந்த பிரபல டிவி சீரியல் நடிகை சுபத்ரா அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியபோது ’டெல்லியில் நடைபெற்ற வன்முறை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பாஜக தலைவர்கள் பேசி வருக்கின்றனர். குறிப்பாக கபில் மிஸ்ரா அனுராக் தாக்கூர் ஆகியோர் வன்முறையை தூண்டும் விதமாக பேசியதால், தான் மிகவும் அதிர்ச்சி அடைந்ததாகவும் இவர்கள் இருக்கும் கட்சியில் இனிமேல் தன்னால் இருக்க முடியாது என்பதால் அக்கட்சியிலிருந்து விலகுவதாகவும் தெரிவித்துள்ளார். பாஜக தலைவர்களின் பேச்சைக் கண்டித்து அக்கட்சியில் இருந்து நடிகை சுபத்ரா விலகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

23 வயது இளம் நடிகை தூக்கில் தொங்கி தற்கொலை: சென்னையில் பரபரப்பு

சென்னையில் 23 வயது இளம் நடிகை திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

'எங்க தல தோனிக்கு பெரிய விசில் அடிங்க' வைரலாகும் பாடல்

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இம்மாதம் 29ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. முதல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது

ரூ.1.5 கோடி நன்கொடை கொடுத்த '2.0' நடிகர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகர் அக்சய்குமார் தற்போது நடித்து வரும் படங்களில் ஒன்று 'லட்சுமி பாம்'.

ரஜினியிடம் பேசியது என்ன? மதகுருமார்கள் பேட்டி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை இன்று இஸ்லாமிய மதகுருமார்கள் சந்தித்து பேசியதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் ரஜினியிடம் பேசியது

ரஜினியுடன் இஸ்லாமிய மதகுருமார்கள் சந்திப்பு!

மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய சிஏஏ சட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் அளித்த பேட்டியில்