ஒரே டீமில் 7 பேருக்கு கொரோனா… ஒரே இரவில் புது அணியை உருவாக்கிய அதிசயம்!
- IndiaGlitz, [Wednesday,July 07 2021] Sports News
இலங்கைக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் வெற்றிக் கோப்பையை சுமந்து கொண்டு சொந்த நாட்டிற்கு திரும்பியுள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் அணி. இந்நிலையில் இந்த அணி பாகிஸ்தானுடன் நாளை முதல் அடுத்த தொடரில் விளையாட இருக்கிறது. இந்தத் தொடருக்காக ஏற்கனவே பாகிஸ்தான் கிரிக்கெட் அணியினர் இங்கிலாந்தில் முகாமிட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பாகிஸ்தானுடன் 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட இருக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் உள்ள மூத்த வீரர்கள் 3 பேருக்கு தற்போது கொரோனா பாதிப்பு எற்பட்டு இருக்கிறது. மேலும் இந்த அணியின் நிர்வாகிகள் 4 பேருக்கும் கொரோனா பாசிட்டிவ் என ரிசல்ட் வந்து இருக்கிறது. இதனால் ஒட்டுமொத்த அணியும் தற்போது குவாரன்டைனில் வைக்கப்பட்டு உள்ளனர்.
மோர்கன், பேர்ஸ்டோ, சாம் பில்லிங்ஸ், சாம் கரன் உள்ளிட்ட மூத்த வீரர்கள் அனைவரும் தற்போது குவாரன்டைனில் உள்ள நிலையில் நாளை நடைபெற இருக்கும் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் யார் விளையாடுவது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் புது ஜுனியர் அணியை உருவாக்கி ஒரே இரவில் செம கெத்து காட்டி இருக்கிறது இங்கிலாந்து கிரிக்கெட் அகாடமி.
இந்த அணியில் உள்ள 9 வீரர்களுக்கு இதுதான் முதல் சர்வதேசப் போட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது. மீதமுள்ள 2 வீரர்கள் மட்டுமே சர்வதேசப் போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி உள்ளனர். மேலும் புது அணியை மூத்த வீரர் பென் ஸ்டோக்ஸ் வழிநடத்துவார் என்றும் கூறப்படுகிறது. இவரும் கடந்த 2 மாதங்களாக எந்த விளையாட்டு போட்டிகளிலும் கலந்து கொள்ளாமல் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இப்படி ஒரே அணியில் உள்ள 3 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் ஒரே இரவில் புது அணியை உருவாக்கி இருக்கிறது இங்கிலாந்து கிரிக்கெட் அகாடமி. இதனால் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் பாகிஸ்தானுக்கு எதிராக களம் இறங்கும் இளம் வீரர்கள் பலவீனமாக இருப்பார்களா? அல்லது இங்கிலாந்துக்கு வீரர்களுக்கே இருக்கும் அசட்டு தைரியத்துடன் மோதி வெற்றி கோப்பையை கைப்பற்றுவார்களா? விரைவில் தெரியவரும்.