நிர்வாண புகைப்பட விவகாரம்: மிரட்டிய ஹேக்கருக்கு அதிர்ச்சி அளித்த நடிகை!
- IndiaGlitz, [Tuesday,June 18 2019]
நிர்வாண புகைப்படத்தை வெளியிடுவேன் என மிரட்டிய ஹேக்கருக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் நடிகை ஒருவர் தன்னுடைய நிர்வாண புகைப்படத்தை தானே வெளியிட்டு அதிர்ச்சி அளித்துள்ளார்.
அமெரிக்க நடிகையும் பாடகியுமான பெல்லா த்ரோன், தனது மொபைல் போனில் தன்னுடைய நிர்வாண புகைப்படங்களை பதிவுசெய்து வைத்திருந்தார். ஆனால் இந்த புகைப்படங்கள் ஒரு மர்ம நபரால் ஹேக் செய்யப்பட்டது. அந்த ஹேக்கர், அவ்வப்போது பெல்லாவை பயமுறுத்தி வந்ததாகவும், நிர்வாண புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுவிடுவதாக மிரட்டி வந்ததாக தெரிகிறது
இந்த நிலையில் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த பெல்லா த்ரோன், 'நீ என்ன என்னுடைய நிர்வாண புகைப்படங்களை வெளியிடுவது, நானே வெளியிட்டு கொள்கிறேன்' என தன்னுடைய நிர்வாண புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
ஹேக்கரின் மிரட்டலால் நான் இரவு முழுவதும் தூங்காமல் இருந்தேன். இனிமேல் நான் நிம்மதியாக தூங்குவேன் என்று பெல்லா த்ரோன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்