பெல்ஜியத்தை  சேர்ந்த இளம்பெண் நண்பர்களால் சுட்டுக்கொலை...!

  • IndiaGlitz, [Friday,May 07 2021]

பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த, பிரிட்டிஷ்-பெல்ஜிய இளம்பெண் அவளுடைய 2 ஆண் நண்பர்களால் லாகூரில் சுட்டுக் கொல்லப்பட்டார்

காவல்துறை உதவி கண்காணிப்பாளர் லாகூர் சித்ரா கான் இது குறித்து கூறியிருப்பதாவது,

'பாகிஸ்தான் வம்சாவளியைச்சேர்ந்தவர் மகிரா சுல்பிகர், இவர் பாதுகாப்பு வீட்டுவசதி ஆணையத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள வாடகை குடியிருப்பில் கடந்த திங்களன்று இறந்து கிடந்தார். 25 வயதே நிரம்பிய பிரிட்டிஷ்-பெல்ஜிய இளம்பெண் திருமண பிரச்சனை காரணமாக தனது இருஆண் நண்பர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதாக, காவல் துறையினர் சார்பாக கடந்த செவ்வாயன்று கூறப்பட்டுள்ளது.

மஹிரா பிரிட்டிஷ்-பெல்ஜிய இரட்டை நாட்டவராக இருந்துள்ளார். சுமார் மூன்று மாதங்களுக்கு பெல்ஜியத்திலிருந்து இங்கு வந்து வாடகை வீட்டில் தங்கியுள்ளார். அந்த வீட்டை தனது தோழி இக்ராவுடன் பகிர்ந்து தங்கி இருந்துள்ளார். மஹிரா கொலையாகி இறந்ததை தொடர்ந்து இக்ரா காவல் துறையினரிடத்தில் தெரிவித்துள்ளார் . இந்த கொலை வழக்கில் சந்தேக நபராக மஹிராவின் நண்பர் சாத் அமீர் பட் இருப்பதாக காவல் துறையினருக்கு தெரியவந்துள்ளது.

மஹிராவை திருமணம் செய்துகொண்டால் வெளிநாட்டு பிரதிநிதியாக இருக்கலாம் என்ற ஆர்வத்துடன் பட் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இளம்பெண் மறுத்ததை தொடர்ந்து பட் சுட்டுக்கொலை செய்துள்ளார் என காவல் அதிகாரி கூறியுள்ளார்.

பெண்ணின் பெற்றோர்கள் இங்கிலாந்தில் இருப்பதால், அவர்களுக்கு இச்சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. லாகூரில் உள்ள மாமா வீட்டிற்கு மஹிரா கொலையாவதற்கு முன்ன நாள் சென்றுள்ளார். ஆசாத் அமீர் பட் மற்றும் ஜாஹித் ஜாதூன் ஆகிய ஆண் நண்பர்கள் இவரை திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்ததாகவும், அதற்கு மறுத்துவிட்டதால் தன்னை அச்சுறுத்துவதாகவும் அவர் மாமாவிடம் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து பட் மற்றும் ஜடூன் இருவர் மீதும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.மஹிராவின் பிரேத பரிசோதனையில் அவருக்கு இரண்டு தோட்டாக்கள் மூலம் கழுத்து மற்றும் கையில் காயங்கள் ஏற்பட்டதாகவும், வலது கை மற்றும் இடது காலிலும் காயங்கள் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.