செடிகளை வைத்து கண்ணாடி கூண்டு முகக்கவசம்… எதற்கு இந்த முயற்சி?
Send us your feedback to audioarticles@vaarta.com
பெல்ஜியத்தைச் சேர்ந்த ஒருவர் உண்மையான தாவரச் செடிகளை வைத்து கண்ணாடியால் வடிவமைக்கப்பட்ட முகக்கவசத்தை அணிந்து கொண்டு பொது மக்கள் மத்தியில் நடமாடி வருகிறார். இதுகுறித்து கருத்துக் கூறும் அவர் தற்போது கொரோனா நேரத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு சுற்றுச்சூழல் பற்றிய புரிதல் இன்மையே காரணம் என்பதை தெளிப்படுத்தவும் மேலும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இப்படி செய்தததாகத் தெரிவித்து உள்ளார்.
இதற்காக அலைன் வெர்சுவரன் எனும் பெயர்க்கொண்ட அந்த நபர் போர்டபிள் முறையிலான கண்ணாடியைக் கொண்டு முகக்கவசத்தை வடிவமைத்து உள்ளார். மேலும் அந்தக் கண்ணாடி கூண்டிற்குள் உண்மையான தாவரச் செடிகள் வைக்கப்பட்டு உள்ளன. இந்தத் தாவரச் செடிகள் கண்ணாடி முகக்கவசத்திற்குள் இருக்கும்போது ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லாமல் சுதந்திரமாக உணர்வதாகவும் தெரிவித்து உள்ளார்.
சுற்றுச்சூழல் தன்மை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள கொரோனா எனும் பேரக்கன் தற்போது உலகையே தலைகீழாக மாற்றியுள்ளது. இந்நேரத்தில் சுற்றுச்சூழலை குறித்து புரிதலை ஏற்படுத்துவதற்காக அலைன் கண்ணாடிக் கூண்டிற்குள் தாவரங்கள் வைக்கப்பட்ட முகக்கவசத்தை போட்டுக்கொண்டு சாலைகளில் நடமாடி வருகிறார். இவரை பார்த்து வித்தியாசமாக உணரும் பலரும் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments