செடிகளை வைத்து கண்ணாடி கூண்டு முகக்கவசம்… எதற்கு இந்த முயற்சி?

  • IndiaGlitz, [Tuesday,April 27 2021]

பெல்ஜியத்தைச் சேர்ந்த ஒருவர் உண்மையான தாவரச் செடிகளை வைத்து கண்ணாடியால் வடிவமைக்கப்பட்ட முகக்கவசத்தை அணிந்து கொண்டு பொது மக்கள் மத்தியில் நடமாடி வருகிறார். இதுகுறித்து கருத்துக் கூறும் அவர் தற்போது கொரோனா நேரத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு சுற்றுச்சூழல் பற்றிய புரிதல் இன்மையே காரணம் என்பதை தெளிப்படுத்தவும் மேலும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இப்படி செய்தததாகத் தெரிவித்து உள்ளார்.

இதற்காக அலைன் வெர்சுவரன் எனும் பெயர்க்கொண்ட அந்த நபர் போர்டபிள் முறையிலான கண்ணாடியைக் கொண்டு முகக்கவசத்தை வடிவமைத்து உள்ளார். மேலும் அந்தக் கண்ணாடி கூண்டிற்குள் உண்மையான தாவரச் செடிகள் வைக்கப்பட்டு உள்ளன. இந்தத் தாவரச் செடிகள் கண்ணாடி முகக்கவசத்திற்குள் இருக்கும்போது ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லாமல் சுதந்திரமாக உணர்வதாகவும் தெரிவித்து உள்ளார்.

சுற்றுச்சூழல் தன்மை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள கொரோனா எனும் பேரக்கன் தற்போது உலகையே தலைகீழாக மாற்றியுள்ளது. இந்நேரத்தில் சுற்றுச்சூழலை குறித்து புரிதலை ஏற்படுத்துவதற்காக அலைன் கண்ணாடிக் கூண்டிற்குள் தாவரங்கள் வைக்கப்பட்ட முகக்கவசத்தை போட்டுக்கொண்டு சாலைகளில் நடமாடி வருகிறார். இவரை பார்த்து வித்தியாசமாக உணரும் பலரும் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர்.

More News

இன்றோடு எல்லாவற்றையும் விட்டுவிடுகிறேன்: தாமிராவின் கடைசி ஃபேஸ்புக் பதிவு!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் இயக்குனர் சிகரம் பாலசந்தர், இயக்குனர் இமயம் பாரதிராஜா உள்பட பலர் நடித்த 'ரெட்டைசுழி' என்ற திரைப்படத்தை இயக்கிவரும் அதன் பின்னர் சமுத்திரக்கனி,

பாதுகாப்பு இன்றி நடந்த படப்பிடிப்பு: சென்னை போலீஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை!

சென்னை அருகே கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காமல் பாதுகாப்பின்றி நடந்த படப்பிடிப்பு குறித்த தகவல் அறிந்ததும் உடனடியாக நடவடிக்கை எடுக்க சென்னை காவல் துறை உத்தரவிட்டுள்ள

ஜடேஜாவை கேப்டனாக்கி அழகு பார்ப்பாரா தல தோனி?

சமீபத்தில் நடைபெற்ற பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் 37 ரன்கள் அடித்தும், 4 விக்கெட்டுகளை வீழ்த்தியும் ஜடேஜா மிக அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் 

விஜய் சேதுபதியால் இந்திய லெவலில் அளவில் பேசப்படும் வெற்றிமாறனின் 'விடுதலை'

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அகில இந்திய நடிகராக மாறிவிட்டார் என்பது தெரிந்ததே. சமீபத்தில் தெலுங்கில் வெளியான 'உப்பென்னா'

வீட்டிற்குள்ளும் முகக்கவசம் அணியும் நேரம் வந்துவிட்டது… கதறும் சுகாதாரத்துறை!

கொரோனா பரவல் அதிகரித்து விட்ட நிலையில் தடுப்பூசி செலுத்திக் கொள்வதுடன் மக்கள் தங்கள் வீடுகளுக்குள்ளும் முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது