பெய்ரூட் வெடிவிபத்து: போட்டோவுக்கு போஸ் கொடுத்த மணமகள் பதறி ஓடிய வீடியோ வைரல்
- IndiaGlitz, [Thursday,August 06 2020]
லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட் என்ற நகரில் சமீபத்தில் அமோனியம் நைட்ரேட் இருப்பு வைக்கப்பட்டிருந்த இடத்தில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தின் காரணமாக பல கிலோமீட்டர் தூரத்தில் இருந்த கட்டிடங்களுக்கு சேதம் ஏற்பட்டது என்பதும் 30க்கும் மேற்பட்டோர் பலியாகினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் மூவாயிரத்துக்கு மேற்பட்டோர் இந்த வெடி விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அமோனியம் நைட்ரேட் கிடங்கு பராமரிப்பு இல்லாமல் இருந்ததே இந்த வெடி விபத்திற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இந்த வெடி விபத்து நிகழ்ந்தபோது திருமண உடையில் போட்டோவுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருந்த இஸ்ரா என்ற மணப்பெண் வெடிவிபத்து சத்தம் கேட்டதும் பதறி ஓடிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
பெய்ரூட்டில் வெடிவிபத்து நடப்பதற்கு ஒருசில நிமிடங்களுக்கு முன் இஸ்ரா என்ற மணமகள் புகைப்படத்திற்காக விதவிதமான போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார். வெள்ளை உடை அணிந்த மணமகள் இஸ்ராவை புகைப்படக் கலைஞர் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த போது தான், திடீரென பயங்கர வெடிச்சத்தம் கேட்டது.
இந்த வெடிச்சத்தம் கேட்டதும் உடனடியாக அந்த இடத்தை விட்டு மணமகள் இஸ்ரா ஓடிய காட்சியும் அவரை பத்திரமாக அவரது குடும்பத்தினர் அழைத்துச் சென்ற காட்சியும் அந்த விடியோவில் உள்ளது. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
https://t.co/2fAhIc8oRV@VirtualAxiom @TraversAlvirez @RiendeauRoman @GDFilms12 @TellerYT @Rkraiem100 @thanhhai1999191 @JigokuCake
— ApacheSnow69 ???? (@excalibur1151) August 6, 2020