புதிய வைரஸால் மீண்டும் ஊரடங்கு உத்தரவு: என்ன நடக்கிறது சீனாவில்?
- IndiaGlitz, [Saturday,June 13 2020]
சீனாவிலுள்ள வூகான் என்ற மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் அதன்பின் சீனா முழுவதும் மிக வேகமாக பரவி அந்நாட்டில் பெரும் உயிரிழப்புக்களை ஏற்படுத்தியது. அதனை அடுத்து அங்கிருந்து உலகின் அனைத்து நாடுகளுக்கும் பரவி குறிப்பாக அமெரிக்கா, பிரேசில், பிரிட்டன் உட்பட சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது
இந்த நிலையில் கொரோனா வைரஸ்க்கு மூல காரணமாக இருந்த சீனாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டு மீண்டும் இயல்பு நிலை திரும்பியுள்ளது. கடைகள், திரையரங்குகள் உள்பட அனைத்தும் திறக்கப்பட்டு மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகின்றனர்
இந்த நிலையில் திடீரென மீண்டும் புதிய வைரஸ் சீனாவின் பெய்ஜிங் நகரில் தாக்கி வருவதாகவும் இதனை அடுத்து அங்கு மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் தாக்கியுள்ள புதிய வைரஸ் என்னவாக இருக்கும்? இந்த வைரசும் கொரோனா போல் உலக நாடுகளில் பரவுமா? என்ற அச்சம் உலக நாடுகள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த நிலையில் உண்மையில் சீனாவில் என்ன நடக்கிறது என்பதை சீனா அரசு உலக நாடுகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது