மெக்சிகோவைத் தொடர்ந்து ஜப்பானிலும் ஆரம்பித்து விட்டது!!! 2020 இதோட முடியாது போல...
- IndiaGlitz, [Friday,June 26 2020]
கொரோனா நோய்த்தொற்று ஒருபக்கம் உலகத்தையே புரட்டி எடுத்து வருகிறது என்றால் இன்னொரு பக்கம் பெருமழை, நிலநடுக்கம் என்ற சில நாடுகள் கொடூரத்தை அனுபவித்து வருகின்றன. சில நாட்களுக்கு முன்பு மெக்சிகோவில் 7.4 ரிக்டர் அளவிற்கு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும் இந்தியா, சீனா போன்ற நாடுகளில் பெரு மழையும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா நோய்த்தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இயற்கைப் பேரிடங்களின் தாக்கத்தால் மக்கள் கடும் அவதிக்குள்ளாவது தொடருகிறது.
தறபோது, ஜப்பான் நாட்டில் கிழக்கு மாகாணத்தில் உள்ள சிபா என்னும் இடத்தில் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. ரிக்டர் அளவில் 6.2 ஆக இருந்ததாகவும் கூறப்படுகிறது. பூமிக்கு அடியில் 30 மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் புவியியல் வல்லுநர்கள் கணித்து இருக்கின்றனர். அதிகப் பட்சமாக 5 நிமிடங்களுக்கு இந்த நிலநடுக்கம் நீடித்து இருக்கிறது. இதனால் கடுமையான பதட்டம் ஏற்பட்டு இருக்கிறது. கட்டிடங்கள், வணிக நிறுவனங்கள் போன்றவை கடுமையான அதிர்வுகளால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். மக்கள் உறங்கிக்கொண்டு இருக்கும்போது இச்சம்பவம் நடைபெற்றத்தால் பலர் தூக்கத்தில் அலறிக் கொண்டு தெருவுக்கு வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது.
மத்திய ஜப்பானில் இருந்து வட கிழக்கு ஜப்பான் வரையிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டு இருக்கிறது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளைச் சுற்றியுள்ள நகரங்களில் கடும் அதிர்வுகள் காணப்பட்டதாக ஜப்பான் டுடே செய்தி வெளியிட்டு இருக்கிறது. இதுவரை உயிரிழப்புகள் நிகழ்ந்ததாகவும் எந்தத் தகவலும் வெளியாக இல்லை என்பது மட்டுமே பெரிய நிம்மதி.