'வாடிவாசலுக்கு முன் ஒரு சூர்யா படம்.. இயக்குனர் யாராக இருக்கும்?

  • IndiaGlitz, [Saturday,June 10 2023]

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ’கங்குவா’ என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில மாதங்களில் முடிவடைந்து விடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ’கங்குவா’ படத்தை அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'வாடிவாசல்’ திரைப்படத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் வெற்றிமாறன் தற்போது ’விடுதலை’ படத்தின் இரண்டாம் பாகத்தில் பிஸியாக இருப்பதால் அந்த படத்தை முடிக்கவே அவருக்கு இன்னும் ஒரு சில மாதங்கள் ஆகும் என்று தெரிகிறது.

மேலும் 2024-ஆம் ஆண்டு தான் ’விடுதலை’ படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால் ’கங்குவா’ படத்தை முடித்தவுடன் வாடிவாசலுக்கு முன் ஒரு படத்தை முடிக்க சூர்யா திட்டமிட்டுள்ளதாகவும் இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

அனேகமாக சுதா கொங்காரா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகும் திரைப்படத்தில் சூர்யா நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும், இந்த படம் வாடிவாசலுக்கு முன் உருவாகும் என்றும் கூறப்படுகிறது.

More News

உலக அழகிப்போட்டி இந்தியாவிலா? 27 வருடங்களுக்குப் பிறகு கிடைத்த கவுரவம்!

பெண்ணின் ஆற்றலையும் தனித்துவத்தையும் கொண்டாடும் வகையில் உலக அழகிப்போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.

திருமண நாளில் சர்ப்ரைஸ் கொடுத்த விக்னேஷ் சிவன்.. கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த நயன்தாரா?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் நேற்று தங்களது முதலாவது திருமண நாளை கொண்டாடினார்கள் என்பதும் இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலானது என்பது தெரிந்ததே. 

30 வருடங்களுக்கு பின் மீண்டும் இணையும் ரஜினிகாந்த் - அமிதாப்பச்சன்.. 'தலைவர் 170' கதை இதுதான்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் 170 வது திரைப்படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்க இருக்கும் நிலையில் இந்த படத்தில் அமிதாப்பச்சன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

'விடாமுயற்சி' லுக் இதுதான்.. வைரலாகும் அஜித்தின் லண்டன் புகைப்படம்..!

அஜித் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாக இருக்கும் 'விடாமுயற்சி'  என்ற படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பாக அஜித் மற்றும்

பெண்களுக்கான சூப்பர் சேமிப்பு திட்டம்… அதுவும் குறுகிய காலத்தில்… விவரங்கள் இதோ?

இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரின்போது நிமியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான சேமிப்பு பத்திரம் ஒன்றை அறிமுகப்படுத்தினார்