'வாடிவாசலுக்கு முன் ஒரு சூர்யா படம்.. இயக்குனர் யாராக இருக்கும்?

  • IndiaGlitz, [Saturday,June 10 2023]

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ’கங்குவா’ என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில மாதங்களில் முடிவடைந்து விடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ’கங்குவா’ படத்தை அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'வாடிவாசல்’ திரைப்படத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் வெற்றிமாறன் தற்போது ’விடுதலை’ படத்தின் இரண்டாம் பாகத்தில் பிஸியாக இருப்பதால் அந்த படத்தை முடிக்கவே அவருக்கு இன்னும் ஒரு சில மாதங்கள் ஆகும் என்று தெரிகிறது.

மேலும் 2024-ஆம் ஆண்டு தான் ’விடுதலை’ படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால் ’கங்குவா’ படத்தை முடித்தவுடன் வாடிவாசலுக்கு முன் ஒரு படத்தை முடிக்க சூர்யா திட்டமிட்டுள்ளதாகவும் இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

அனேகமாக சுதா கொங்காரா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகும் திரைப்படத்தில் சூர்யா நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும், இந்த படம் வாடிவாசலுக்கு முன் உருவாகும் என்றும் கூறப்படுகிறது.