20 வருடங்களுக்கு முன்பே என் அம்மாவிடம் ஆசி பெற்றவர் அஜித்.. 'துணிவு' நடிகரின் மலரும் நினைவுகள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
20 வருடங்களுக்கு முன்பே அஜித் என் அம்மாவிடம் ஆசி பெற்றுள்ளார் என மலரும் நினைவுகளை ‘துணிவு’ படத்தில் நடித்த பிரபல நடிகர் பகிர்ந்துள்ளார்.
அஜித் நடிப்பில், எச் வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘துணிவு’. நாளை மறுநாள் திரையரங்குகளில் வெளியாக உள்ள இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் இந்த படத்தில் நடித்த நட்சத்திரங்கள் பலர் ஊடகங்களில் பேட்டி அளித்து வரும் நிலையில் சமுத்திரகனி சமீபத்தில் அளித்த பேட்டியில் சில நெகிழ்ச்சியான சம்பவங்களை நினைவு கூர்ந்தார். கடந்த 2003ஆம் ஆண்டு தான் முதன் முதலாக ’உன்னை சரணடைந்தேன்’ என்ற படத்தில் பணிபுரிந்த போது வெங்கட் பிரபு மூலம் அஜித் என்னை அழைத்து பாராட்டினார். அப்போதே அவர் என் அம்மாவின் பேட்டியை இணையதளங்களில் பார்த்து என் அம்மாவிடம் ஆசி பெற்றார். அப்போது முதல் இப்போது வரை அவர் மாறாமல் இருப்பது எனக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் நான் ஒரு இயக்குனர், கதாசிரியர் என்பதை மறந்துவிட்டு தான் ‘துணிவு’ படத்திற்கு ஒரு நடிகராக நடிக்க சென்றேன். இயக்குனர் எச்.வினோத் என்ன சொல்கிறாரோ அதை மட்டும் தான் செய்தேன். நான் ஒரு இயக்குனரின் நடிகராக தான் அந்த படத்தில் இருந்தேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். என்னை முழுவதுமாக எச் வினோத் மாற்றி விட்டார் என்றும் இந்த படத்தில் எனது போலீஸ் கேரக்டர் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com