'தலைவர் 171' படத்திற்கு முன்பே ஒரு லோகேஷ் கனகராஜ் படம்.. மாஸ் நடிகர் தான் ஹீரோ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் ஒரு படத்தை இயக்க இருக்கிறார் என்பதும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கும் இந்த படத்தின் டைட்டில் இம்மாதம் 22ஆம் தேதி வெளியாக இருக்கிறது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் படம் குறித்த அறிவிப்பு சற்றுமுன் வெளியாகி உள்ள நிலையில் அந்த படத்திற்கு ’பென்ஸ்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை ’ரெமோ’ மற்றும் ’சுல்தான்’ படங்களை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தில் தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களில் ஒருவரான ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த படத்திற்கு ’பென்ஸ்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அபாரமான போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ள நிலையில் இந்த போஸ்டர் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’தலைவர் 171’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் அவர் தயாரிக்கும் படத்தின் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
On this auspicious day, I present my Next project. I'm extremely elated to work with @lokeshkanagaraj brother. It's been a dream come true for a long time. I’m also happy to collaborate with Producers, @TheRoute - Jagdish Palanisamy, @PassionStudios_ Sudhan Sundaram in… https://t.co/409ERX4Dgl
— Raghava Lawrence (@offl_Lawrence) April 14, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com